சிரிங்க பாஸ்‘‘அவர் கிளி ஜோசியக்காரரா இருக்கலாம்... அதுக்காக சீட்டாட்டத்துக்கு அதைக் கொண்டு வந்து ஜோக்கரை எடுத்துத் தரச் சொல்லி கேட்கறதெல்லாம் நல்லா இல்ல!’’

‘‘திடீரென்று ஏன் சாமரம் வீச ஆண்களை நியமித்து
விட்டீர்கள்?’’
‘‘அரசியாரின் ஆணை மன்னா!’’

“அந்த ஸ்கூல்ல ஏன் நிறைய பூனைங்க
விளையாடுது..?’’
“அது ‘எலி’மென்டரி ஸ்கூல் ஆச்சே!”

‘‘அட... என் பொறந்தநாளுக்கு நீ கூட பரிசு தர்றியே..?’’
‘‘தினமும் ஆறின சோறை தர்றீங்க... அதான் ஹாட் பேக் தந்திருக்கேன்! சமைச்சதும் என் பங்கை இதுல போட்டுடுங்க!’’

“மேடைல தனக்கு சன்மானம்
 கொடுக்கறப்ப ஏன் பாடகர் நடுங்கறார்?’’
“வாசல்ல கடன் கொடுத்தவன் நிற்கறானாம்!’’

“டிராஃபிக் போலீஸ்காரர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாகிடுச்சா..?’’
“ம்... சீர்வரிசைக்கு பதிலா ஹெல்மெட்டை கொடுத்துட்டார்!”

“அந்தப் பொண்ணு ஏன் தன் மாமியாரை வைச்சு பூட்டிட்டு
டூட்டிக்கு கிளம்பறா?’’
“அவ போலீஸ்காரியாச்சே!”

“அவனை ஏன் பிச்சைக்கார‘ர்’னு மரியாதையா கூப்பிடற?’’
“வீடு வாங்கக் கடன்
கொடுத்திருக்காரே!”

“என்னப்பா ஆட்டோ ரிக்‌ஷாவுல நிறையக் கயிறு
கட்டியிருக்கு?”
“ரிக்‌ஷா பந்தன் சார்!’’

“என்னது? வேலைக்காரி பியூட்டி பார்லர் போறாளா?”
“ஆமாம்! நடிகையோட வேலைக்காரியாச்சே!”

“வீட்டு வாசல்ல கோலம் போடாம ஏன் வேலைக்காரி அஞ்சாயிரம்னு எழுதியிருக்கா?”
“அஞ்சு மாச சம்பள பாக்கியை நினைவுபடுத்தறா!”

 வேமாஜி