சாபம்



சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் வங்கியின் கடனட்டை விற்கும் பணிப்பிரிவில் ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாறுதல் பெற்று எங்களூரிலிருந்து அம் மாநகருக்கு வந்து சேர்ந்தேன்.

‘‘தம்பி பேச்சுலர்தானே?  
‘‘சுவத்துல ஆணிஅடிக்கக் கூடாது!
‘‘5ம் தேதி வாடகை கேக்காம கொடுத்துடணும்…
‘‘விருந்தாளிங்க வந்தா 2 நாளைக்கு மேல தங்கக்கூடாது…’’
‘‘அதெல்லாம் எந்த பிரச்னையும் இருக்காது சார்...’’
வேப்பமரத்தின் பசுமையும் குளுமையும் முதல் நாளிலிருந்தே எனக்கு பிடித்துப்போனது. உச்சிவெயிலுக்குப் பின்னான பொழுதுகளில் என் அறையின் சுவரிலும், ஜன்னலிலும் படிய விருந்த சூரியனின் உக்கிரத்தை தடுக்கத் தோதாய் தன் கிளைகளைப் பரவவிட்டிருந்தது.

குடிவந்த சில மாதங்களில் அந்த ஆண்டுக்குரிய கோடை துவங்கியது.நகரின் தலைக்கு மேல் சூரியனைக் கட்டித் தொங்கவிட்டது போல கோடையின் துவக்கத்திலிருந்தே வெந்தும் தணியாத தணலாக கொதிப்பேறிப் போயிருந்தது நகரம். ஒவ்வொரு கோடையிலும் துளி மழைக்குக் கூட வாய்ப்பற்று நரகத்தின் நெருப்பு நிலச்சாயல் படிந்துவிடும்போல இந்நகருக்கு.

விற்பனைப் பிரதிநிதியான நானும், கண்டு, கேட்டு, உண்டு, நுகர்ந்து, தொட்டறியும் ஐம்புலனும் வெக்கை தேக்கி மாலை வீடு சேருவேன்.
குளித்து என்னை புதுப்பிக்க நினைத்து குழாயைத் திறந்தால் நெருப்பே நீர்வடிவில் கொட்டிக்கொண்டிருக்கும்.அந்தக் கோடைதான் அவ்வேம்பின் பேரருமையை எனக்குச் சொன்னது. மாலையில் அக்கம்பக்கத்து குடியிருப்பு வாசிகளெல்லாம் வீடுகளில் புழுக்கம் தாளாது மொட்டைமாடிக்கும், தெருமுனை பூங்காவிற்கும் இடம்பெயர்வார்கள்.

பகலில் உள்வாங்கிய சூரியசூட்டை மாலையில் வீடுகளின் சுவர்கள் வெக்கையாக வெளித்தள்ளும். உட்கொண்ட வெப்பத்தை நீண்ட பொழுது தேக்கி வைத்திருப்பதில் உருளைக்கிழங்கைப் போலத்தான் கான்கிரீட் கட்டடங்களும். ஆனால், என் படுக்கையறையில் மட்டும் வெக்கையை உணரமுடியாது. காரணம்,அந்த அறையின் வெளிச்சுவர் முழுவதும் வெயிலை மறைத்து கிளைபரப்பி ஒவ்வொரு பகலிலும் சூரியனோடு சமர் புரியும் வேம்பு.
அந்த நகரிலேயே வெக்கை போர்த்தாமல், புழுக்கம் படராமல், வேம்பின் கிளைகளுக்கிடையில் உறங்குவது நானாகத்தானிருக்கும். அதன் சிறுகிளைகளும் இலைகளும் ஒன்றிரண்டு என் ஜன்னலை உரசியபடியிருக்கும்.

காற்றின் சிறு சலனத்திற்கும் வேம்பின் கிளையெல்லாம் அசைந்து ஜன்னலின் வழி எப்படியும் வந்தடைந்துவிடும் ஒவ்வொருநாளும் என்னை உறங்கவைக்கும் சிறு குளிர் காற்று.  ஓய்வு நேரங்களில் ஜன்னலின் வழி அப்பெரும் மரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் ஜன்னலுக்கு நேரெதிரான கிளையில் காகம் ஒன்று வந்தமர்ந்து சிறிது நேரம் கழிய சில அடிதூரம் மாறி மாறி அமர்ந்ததே தவிர அவ்விடம் விட்டு அகலவில்லை.

அதுவரை கைக்கிண்ணத்தில் வைத்து உண்டுகொண்டிருந்த வேர்க்கடலையை கொஞ்சம் எடுத்து ஜன்னல் வெளிவிளிம்பில் வைத்து நான் சற்று நகர, பாதுகாப்பு தூரம் கணக்கிட்டு ஜன்னலில் அமர்ந்து கடலைகளைத் தின்று தீர்த்து பறந்தது. அடுத்தடுத்து சில நாட்களிலும் தொடர்ந்தது; கடலைக்கு பதில் மிச்சர், பொரி, சோறு என மாறியது. ஆச்சர்யமாக இருக்கும். எங்கிருந்து வருகிறது எனத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காலையும் ஜன்னலருகில் அமர்ந்து நான் உணவுண்ணும் நேரம் சரியாக வந்து இரையெடுத்து பின் மறைந்துவிடும்.

சில தினங்களில் உடன் ஒரு காகமும் வந்தமர்ந்தது அம்மரக்கிளையில். பார்த்தவுடன் ஒரு தடுமாற்றம். எது நம்மவன்?
பார்த்தவுடன் காகங்களுக்கு வேறுபாடு கண்டுணர முடியாதுதானே?ஊருக்குள் சுற்றும் காகங்கள் ஏன் எல்லாம் ஒன்றுபோலிருக்கின்றன?
உருவ, பருமன் வித்தியாசத்தை வைத்து சில கணத்தில் நம்மவனைக் கண்டுகொண்டேன். புதிய காகத்தைக் காட்டிலும் சற்று பருமனாக. புது துணை பிடித்திருக்கிறது. அதன் பின் இரு காகங்களுக்கும் தலா ஒவ்வொரு கை சோறிடத் துவங்கினேன்.

சில சமயம் கைகளில் இரையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே நீட்டுவேன். வளர்ப்புக் கிளிகளைப் போல் வந்து கொத்தித் தின்னுமென்ற கற்பனையில். காக்கைகள் மனிதனை ஒருபோதும் நம்புவதில்லை போலும். ஒருமுறை கூட நெருங்கியதில்லை.உண்டபின் அந்த மரத்தின் மற்ற கிளைகளிலும் சற்று நீண்டநேரம் பறந்தமரத் துவங்கின.

ஒரு நீண்ட விடுமுறைக்குப்பின் திரும்பி வந்து ஜன்னல் திறந்து நோட்டமிட்டேன். காகங்களைக் காணவில்லை. நீண்டநாள் பூட்டிக்கிடந்ததால் தூசு படிந்த வீட்டை ஓரளவு சுத்தம் செய்து ஓய்ந்து அமர்ந்தபோதுதான் கவனித்தேன், வாயில் சிறு சுள்ளியைக் கவ்வியபடி அம்மரத்தில் ஒரு மூன்று கிளைப்பிரிவின் மையத்தில் ஏற்கனவே கட்டுமானத்திலிருந்த ஒரு கூட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தது.

என்னை சட்டை செய்யவில்லை. கொண்டுவந்த சுள்ளியை வாகாக கூட்டில் செருகிவிட்டுப் பறந்தது. சிறிது நேரத்தில் இரண்டாவதும் பறந்து வந்து ஒரு வைக்கோலை கூட்டில் கிடத்திவிட்டுப்போனது.சில தினங்களிலே இரண்டும் கூடி ஒரு நேர்த்தியான கூட்டை விரைந்து கட்டின.

தினமும் நான் வைக்கும் இரையையும் நீரையும் எடுத்துக்கொண்டாலும் நீண்ட நேரம் ஓய்ந்து கிளைகளில் அமர்வதில்லை.
அவ்வளவு துரித வேலைக்குக் காரணம் சில நாட்களில் தெரிந்து விட்டது. பெண் காகம் முட்டையிட்டு அடைகாத்து கூட்டிலேயே அமர்ந்து கொண்டது.பூனைகளைப் போல் காக்கைகளின் கூடல் நிமித்தங்களும் ரகசியமானவை. காக்கைகளின் புணர்தல் நிமித்தங்கள் யாரும் அறிந்துவிட முடியாதவை. ஆண் காகம் இணை தேடிக்கூடி துணை முட்டையிடும் பருவம் நெருங்குவதை உணர்ந்து ஒரு கூட்டை கட்டியமர்த்திக் கொண்டது.
இந்தப் பெருநகரத்தில் என் கண் பார்வைக்கிணையான தூரத்தில் ஒரு புள்ளினம் குடும்பமாவது கண்டு மனம் மகிழ்ந்தது.

அந்த பருவமும் ஒரு கடும்கோடைதான். இந்த அக்னிக்கு ஊர் பக்கம் ஓரெட்டு போய்வரலாமென அன்றைய பகலில் தயாராகிக் கொண்டிருந்தேன்.
ஜன்னலருகே டப்... டப்... மரக்கிளைகள் வெட்டப்படும் ஓசை கேட்டது.எப்போதும் மழைக்காலங்களில்தான் அந்நிலத்தின் உரிமையாளர் அம்மரத்தின் மிதமிஞ்சிய கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்தி வைத்திருப்பார்.ஆனால், இந்த கடும்கோடையில் இதென்ன சத்தம்?

ஜன்னல் திறந்து பார்த்தேன். மூர்க்கமாக ஒருவன் மரத்தின் பிற கிளைகளை மையக் கிளைகளின் அடிவரை வெட்டி மண்ணில் வீழ்த்திக் கொண்டிருந்தான்.அதிர்ச்சியாக இருந்தது. இது வழக்கமான கிளை ஒழுங்குக்கான வெட்டாகத் தெரியவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரத்தின் அனைத்துக் கிளைகளையும் கொப்புகளையும் ஒன்றுவிடாமல் மண்ணில் சரித்திருந்தான்.

இறுதியாக காகத்தின் கூடிருக்கும் கொப்பின் மீதேறி கிளையை வெட்டத் துவங்கியவன் காக்கை கூட்டை கண்டவனாக, கீழே நின்றிருந்த உரிமையாளரிடம், ‘‘சார்... காக்கா கூடு ஒண்ணிருக்கு...’’‘‘தள்ளி விடுய்யா...’’‘‘இல்ல சார்... அதுல புதுசா பொரிஞ்ச குஞ்சு ஒண்ணிருக்கு…’’‘‘சரி... அந்த நுனிக்கொப்ப விட்டுட்டு மிச்சத்த வெட்டி வேலைய வெரசா முடி…’’கேட்டவுடன் வெறும் கூட்டை விட்டுவிட்டு மீதியிருக்கும் கிளைகளை வெட்டத் துவங்கினான்.

கூட்டிலிருக்கும் காக்கைக் குஞ்சு வாயை மேல்நோக்கித்திறந்து கத்திக் கொண்டிருந்தது. இன்னும் முழுவதும் வளராத இறகுகொண்ட அதன் உடல் அந்த சிறுகூட்டுக்குள் நடுங்கி துடித்துக் கொண்டிருந்தது.இரு பெரும் காகங்களும் தீவிரமாகக் கரைந்து கொண்டு அந்தக் கிளைமேல் மரவெட்டியின் தலைக்கு மேல் இறக்கையால் தாக்குவதுபோல் தாழப்பறந்து கொண்டேயிருந்தது.மரவெட்டியின் உதவியாளன் ஒரு கிளை கொண்டு அதனை விரட்ட, இரு காகமும் அருகேயுள்ள வீடுகளின் மீதும் மின்கம்பிகள் மீதும் பதற்றத்துடன் மாறி  மாறி அமர்ந்து கொண்டிருந்தன.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே மொட்டை மாடி சென்று மேலிருந்து பார்த்தேன்.

அதற்குள் மரவெட்டி அம்மரத்தின் மூன்று பெருங்கிளைகள் தவிர்த்து ஒரு இலை கூட விட்டு வைக்காமல் பிற கிளைகளை மண்ணில் வீழ்த்தி அவனும் கீழிறங்கியிருந்தான்.கடும் வெயிலில் ஒற்றைக்கிளை மறைவு கூட அற்று கிளையில் அபாயகர விளிம்பில் அந்தக்குஞ்சு கதறிக் கொண்டிருந்தது எனக்கு மட்டும் கேட்டது. மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என்னையும் அந்த இரு காகங்களும் தலையைக் கொத்திவிடுவதுபோல் உரசி அங்குமிங்கும் பறந்தன.

ரயில் நிலையத்தில் காத்திருந்த நண்பன் போன் செய்து ‘‘இன்னும் ஒருமணி நேரத்தில் டிரெயின் கிளம்பப்போகுது...’’ என்றான்.
அவைகளுக்கு எப்படி உதவுவது எனத் தெரியவில்லை. வேறு வழியின்றி வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குக் கிளம்பினேன்.ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தாலும் மனமெல்லாம் காக்கைக் கூட்டின் மீதும் அதன் குடும்பத்தின் மீதும் இருந்தது.ஒரு வாரத்திற்குப் பின் திரும்ப வந்ததும் முதலில் ஓடிச்சென்று ஜன்னல் திறந்து கூடிருந்த கிளையைப் பார்த்தேன்.

கூடு சிதைந்து கிளையில் ஒருபுறம் சரிந்தவாறு தொங்கிக் கொண்டிருந்தது. எங்கு போயின அந்தக் காக்கைகள்? குஞ்சு அதற்குள் பறக்கப் பழகி தப்பியிருக்குமா? வேறு பறவைகள் வேட்டையாடியிருக்குமா? இந்த கடும்கோடை தாளாது கருகி மாண்டிருக்குமா?  
சில நாட்களில் தொங்கிக்கொண்டிருந்த கூடும் அடித்த ஒரு காற்றில் கீழே விழுந்து சிதறிப்போனது.

பின் பருவ மழைக்காலம் துவங்கியது. அதன் பின்புதான் கவனித்தேன், அந்த மரத்திலிருந்து எந்தவொரு கிளையும் இலையும் துளிர்க்கவில்லை... சில பல நாட்களில் வீட்டுக்காரரும் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வருத்தத்துடன் பார்த்துவிட்டு ‘‘நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம்தானே... எப்ப வெட்டி
விட்டாலும் துளுத்துருமே... இந்தவட்டம் என்னாச்சு..?’’ என புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்த வேம்பு தழைக்காததால் அவ்விடத்தைச் சுற்றிய பகுதிகளில் வெக்கை பெருகத்  துவங்கியது. அவ்விடத்தின் உரிமையாளர் அடுத்து ஒரு மூன்று மாதம் பொறுத்துப் பார்த்தார். பின்னொரு நாள் பலத்த மரம் வெட்டும் ஓசை கேட்டது. ஜன்னல் திறந்து பார்த்தேன். அன்றொருநாள் கிளைவெட்டிய மரவெட்டிகள் இருவரும் இன்று மொத்த மரத்தையும் துண்டுதுண்டாக அடிவரை வெட்டி கட்டைகளாக மண்ணில் சரித்துக் கொண்டிருந்தார்கள்.
 
இரு காக்கைகள் எங்கிருந்தோ பறந்து வந்து, வீழ்ந்து கிடந்த மரத்தின் மீதமர்ந்தன எனக்கு நன்கு தெரியும் அவை இம்மரத்தில் கூடுகட்டி வசித்த என் சிநேக காகங்கள்தான். ஆனால், அவைகளுடன் மூன்றாவதான அந்த குஞ்சுக்காகம் இல்லை. அம்மரக்கட்டைகள் மீது இங்குமங்கும் தாவியமர்ந்து மீண்டும் பறக்கத்துவங்கின.அன்றிலிருந்து அக்காக்கைகளின் சாபமே ஒரு அரூப நிழலாய் மரமற்ற அவ்வெளியில் படரத்தொடங்கியது.

அம்மா ஆக மறுத்த கிரண்!

போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவது எவ்வளவு நல்லது என்பதற்கு கிரணே சாட்சி.ஆம். ‘ஓ... போடு!’ கிரணேதான். கதாநாயகியாக நடித்து பின் உடல் பெருத்து அக்கா, அண்ணி என வேடம் தரித்து... என்ன யோசித்தாரோ, உடல் எடையைக் குறைத்து இப்போது ஸ்லிம்மாகி இருக்கிறார்.
உடனே ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என அதிர்ச்சி அடையாதீர்கள்.அம்மாவாகாமல் அக்கா, அண்ணியாகவே வலம் வரத்தான் இந்த ஸ்லிம்!

ஷ்ரத்தா சொன்ன பொய்!

பொய் சொல்லலாம்... அதற்கும் ஓர் எல்லை வேண்டாமா... என பற்களைக் கடிக்கிறார்கள் பிற நடிகைகள்.ஷ்ரத்தா கபூரை பார்த்துதான்.‘சாஹோ’ படத்தில் தனக்கு சம்பளம் ரூ.7 கோடி என பிட்டைப் போட்டிருக்கிறார் ஷ்ரத்தா. அதை நம்புவதா வேண்டாமா என மற்றவர்கள் குழம்ப... இருக்குமோ என திணற... இப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.ஷ்ரத்தா சொன்னதில் கால்வாசிதான் ஊதியமாகப் பெற்றிருக்கிறார்.
இந்த உண்மை தெரிந்ததும்... இப்போது முதல் வரியைப் படியுங்கள்!

மாமனார் மெச்சிய மருமகள்!

வேறு யார்? சமந்தாதான்!

தன் மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஸ்பெயின் சென்றிருக்கும் சமந்தா, ரிலாக்ஸாக அப்போது க்ளிக்கிய சில படங்களை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒன்று இது!

குடியும் குடித்தனமுமாக...

புகைபிடிப்பதை நடிகர்களும், பார்ட்டிக்கு செல்வதை நடிகைகளும் மறைக்கும் இந்தக் காலத்தில் சார்மி வித்தியாசமானவர்.ஆமாம். சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவரேதான். இப்போது சார்மி படங்களில் நடிப்பதில்லை.

மாறாக தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கும் படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அதாவது பூரி இயக்கும் படங்களில் மட்டும் தயாரிப்பு வரவு செலவை கவனிக்கிறார்! அதேநேரம் பார்ட்டிக்கு, தான் செல்வதையும் சார்மி மறைப்பதில்லை.
சந்தேகமே வேண்டாம். படத்தில் அவர் கையில் இருப்பது ஒயினேதான்! இதை யார் சொன்னா..? சார்மியே சொல்லியிருக்கிறார்!

யா.பிலால் ராஜா