ஜொள்ளு விடாதீங்க... ஆல்ரெடி எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கார்!முதல் படமே க்ளிக் ஆனதில் புன்னகையால் பூத்துக் குலுங்குகிறார் சம்யுக்தா ஹெக்டே. ‘கோமாளி’யில் ஸ்கூல் பையன் ஜெயம் ரவியின் லவ்வராக ஸ்கூல் யூனிஃபார்மில் செம ஸ்கோர் செய்த பொண்ணு. பெங்களூரு பேல்பூரி. அறிமுகமான கன்னட ‘கிரிக் பார்ட்டி’ கொடுத்த மரணமாஸ் ரெஸ்பான்ஸில் சாண்டல்வுட்டையே சுண்டி இழுத்தவர். இப்போது கோலிவுட் வந்ததில் சம்யுவுக்கு சால சந்தோஷம்.உங்களை அறிமுகப்படுத்திக்கங்க..?

யா... யா... பூர்வீகம் கன்னடம். ஸ்கூல்ல காமர்ஸ் படிச்சேன். காலேஜ்ல சைக்காலஜி அண்ட் ஜர்னலிசம். சின்ன வயசுல இருந்து டான்ஸ்ல ஆர்வம். இப்ப புரொஃபஷனல் டான்சர். ஆனா, என் டான்ஸ் திறமையை இன்னும் எந்த படத்திலும் பயன்படுத்திக்கல. ஃபேஸ்புக்ல என்னோட பயோடேட்டாவை பார்த்துதான் ஆக்ட்டிங் சான்ஸ் வந்துச்சு. அப்ப எனக்கு வயசு 17தான். இப்ப தமிழுக்கும் வந்திருக்கேன்.

‘கோமாளி’யில் எப்படி..?
மூணு வருஷத்துக்கு முன்பே, ‘கோமாளி’யில் நடிக்கற வாய்ப்பு அமைஞ்சது. என்னோட கன்னட படம் ‘கிரிக் பார்ட்டி’ பார்த்துட்டு இங்க தமிழ்ல நடிக்க கேட்டிருந்தாங்க. ஆக்‌சுவலா நான் இதுல வேறொரு ரோல்ல நடிக்க வேண்டியது. ஆனா, அப்ப ‘கோமாளி’ புராஜெக்ட் உடனே ஸ்டார்ட் ஆகல. சின்ன டைம் எடுத்துச்சு. அப்புறம், ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அதே டீம் வந்தாங்க. செம ஹேப்பியாகிடுச்சு. ஆனா, இந்த டைம் நிகிதா ரோல்ல கமிட் ஆனேன்.

தமிழ்ல என்னோட முதல் படமும் இதான். இந்தப் படத்துக்காக சல்வார் போட்டதும் சந்தோஷமாகிடுச்சு. ஏன்னா, நான் ஸ்கூல் படிக்கும்போது கூட சல்வார் போட்டதில்ல! மினி ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்தான். ஸ்கூல் டைம் லவ் ஸ்டோரீஸ் எப்பவும் பெஸ்ட்  லவ் ஸ்டோரீஸா இருக்கும். ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டதும், எனக்கு என் ஸ்கூல் ஞாபகம்தான் வந்தது. நம்ம முதல் காதலை எப்பவும் மறக்க முடியாதே... அதுவும் ஃபர்ஸ்ட் லவ் எப்பவும் ஸ்கூல்லதான் இருந்திருக்கும்.

இப்படி ‘கோமாளி’ நிறைய ஞாபகப்படுத்துச்சு. அடுத்தும் இதே தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னொரு படம் பண்ணிட்டிருக்கேன். யோகிபாபு நடிக்கற ‘பப்பி’. நீங்க ஸ்கூல் படிக்கும்போது எப்படிப்பட்ட பொண்ணு?

கிட்டத்தட்ட டான் போலதான் இருப்பேன்! நான் ஸ்போர்ட்ஸ் பொண்ணுங்க. ஃப்ரெண்ட்ஸ் கம்மி. என்னை சுத்தியும் பசங்கதான் இருப்பாங்க!எங்க கிளாஸ் பொண்ணுங்களோட பாய்ஃரெண்ட்ஸ் அத்தனை பேரும் எனக்கு ஃப்ரெண்டா இருப்பாங்க. அதனாலேயே மத்த பொண்ணுங்கஎன்னை லைக் பண்ண மாட்டாங்க.  

பத்தாவது படிக்கும்போது கிளாஸ்ல மொத்தம் உள்ள பதினாலு பேர்ல நான் ஒருத்திதான் பொண்ணு! பசங்களோட சேர்ந்து கிரிக்கெட், ஃபுட்பால்னு கலக்குவேன்.என்ன சொல்றார் ஜெயம் ரவி?

அவரோட படங்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆனா, அவரை ‘கோமாளி’யோட பூஜை அன்னிக்குதான் பார்த்தேன். அன்னிக்கு ஸ்கூல் போர்ஷன் ஷூட் வேற இருந்துச்சு. அவரை நேர்ல பார்த்த செகண்ட், ஷாக் ஆகிட்டேன். அவ்ளோ எடை குறைச்சு, ஸ்கூல் பையனாட்டமே இருந்தார். அவர் ரொம்பவே ஹம்பிள். ஸ்வீட் பர்சன். இன்னும் சொல்றதா இருந்தா அவர் ஒரு nice guy. தமிழ் இண்டஸ்ட்ரிக்கு எனக்கொரு குட் வெல்கம் கொடுத்திருக்கார். தேங்க்ஸ் ரவி சார்.

ஒரு சாயல்ல நீங்க கஸ்தூரி மாதிரி இருக்கீங்கனு யாராவது உங்ககிட்ட சொல்லியிருக்காங்களா?நேத்து கூட சிலர் என்கிட்ட, ‘நீங்க கஸ்தூரி மாதிரியே இருக்கீங்க’னு சொன்னாங்க. வெரி சாரி... அவங்க யார்னு எனக்குத் தெரியாதுனு சொன்னேன்!


அப்புறம்தான் அவங்க நைன்டீஸ் ஆக்ட்ரஸ்னு தெரிஞ்சது. அவங்க லுக்ல நான் இல்ல. ஆக்‌சுவலா என்னை ஜெனிலியா மாதிரி இருக்கீங்கனு சொல்லியிருக்காங்க. அவங்க கலர், ஸ்கின் டோன் எல்லாம் எனக்கும் அப்படியே இருக்குதுனு சொல்வாங்க.

இன்ஸ்டாவில் உங்கள பார்த்தால் செம ரொமாண்டிக்கா தெரியறீங்களே..!
தேங்க்ஸ். யெஸ். என் லைஃப்லயும் ரொமாண்டிக், காமெடி எல்லாம் இருக்கு. பாய்ஃப்ரெண்ட் இருக்கார். அவர் ஜெர்மனியில் இருக்கார். யதேச்சையாகத்தான் சந்திச்சோம். அப்டியே பேச ஆரம்பிச்சோம். ஒருத்தர் பத்தி ஒருத்தர் யாருங்கறது தெரியாமலேயே லவ்ல விழுந்துட்டோம்.  
இதுக்கு மேல டீட்டெயில்ஸ் இப்ப வேணாம். டைம் வரும் போது நிறைய சொல்றேன்!

மை.பாரதிராஜா