Face to Face குஷ்பூ பதில்கள்



ஜனநாயகம் அப்படின்னா என்னான்னு பாஜகவுக்கு தெரியாது!

எண்பதுகளின் நடிகர் - நடிகையரின் ரீயூனியன் இந்த ஆண்டு
எப்போது? என்ன ஸ்பெஷல்?
- லாவண்யா, ஈரோடு.

அது ரொம்ப ரொம்ப சீக்ரெட். நிச்சயமா இந்த வருஷமும் இருக்கு. அது எங்க நடக்கப் போகுதுனு எங்க எயிட்டீஸ் கேங்குக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.ஒவ்வொரு வருஷமும் இந்த மீட் முடிச்சதும், அடுத்த வருஷத்துக்கான ஸ்பாட்டையும் முடிவு பண்ணிடுவோம். ரீயூனியன் நடந்து முடிஞ்சதும்தான் வெளியவே போட்டோஸ் ரிலீஸ் பண்ணுவோம். அதுவரை அது சிதம்பர ரகசியம்தான்.

ஒவ்வொரு வருஷமும் அதுக்காக ப்ளான் பண்ணி, ஒரு தீம் பிடிச்சு, கலர் கோடு முடிவு பண்ணி... இப்படி ரொம்ப மெனக்கெடறோம். ரஜினி சார், சிரஞ்சீவி சார், லால் சார், அம்பரீஷ் சார்னு சவுத் இண்டியன் ஸ்டார்ஸ் அத்தனை பேரும் அந்த நேரத்துல அசெம்பிள் ஆகிடுவோம். அங்க நாங்க குழந்தைகள் உலகத்துக்குள்ளேயே போயிடுவோம். கிட்ஸ் விளையாடும் அத்தனை கேமும் நாங்களும் விளையாடி செம ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா கலர்ஃபுல்லா அதகளப்படுத்திடுவோம்.

வெளிய இருந்து யாரும் அங்க வரமுடியாது. போட்டோஸ் கூட நாங்களே எடுக்கறதுதான். மோகன்லால் சார் வருஷா வருஷம் மேஜிக் பண்ணுவார். அவரது மேஜிக் சக்சஸ் ஆகாததுக்கு நான்தான் காரணம்னு என்னை கலாய்ப்பார். ஸோ, இந்த வருஷம் அவரது மேஜிக் சக்சஸ்ஃபுல்லா ஆகுதானு பார்க்க ஆவலா இருக்கேன்! இந்த வருஷம் அம்பரீஷ் சாரை பயங்கரமா மிஸ் பண்ணுவோம். எங்க மத்தியில் அவர் இல்லை. அவரோட சிரிப்பு அவ்ளோ ஸ்பெஷலா இருக்கும். அவர் வந்தாலே அந்த இடம் லைவ்வா களைகட்டும்.

உங்களுக்கு வளமான வாழ்வையும், புகழையும் அளித்து வரும் தமிழக ரசிகர்களுக்கு ஏதாவது நற்பணிகள் செய்யும் திட்டம் உண்டா?
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.
தமிழக ரசிகர்களுக்கு என் வாழ்நாள் முழுதுமே கடன்பட்டிருக்கேன். எனக்கு பெயர், புகழ் கொடுத்ததோடு நல்லதொரு வாழ்க்கையும் கொடுத்திருக்கு.
ஒரு கட்டத்துக்கு மேல என்னை ஆதரிச்சு ‘இது வாழவைக்கும் பூமி’னு உணர்த்தி நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கு. நான் நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அழகான குடும்பத்தையும் கொடுத்திருக்கு. தமிழக ரசிகர்களுக்கு நிச்சயம் கடமைப்பட்டிருக்கேன். அதை எப்படி அர்ப்பணிக்கப் போறேன்னு எனக்குத் தெரியல. சந்தர்ப்பம் வரும் போது நிச்சயமா பண்ணுவேன்!

ஹன்சிகாவை ‘குட்டி குஷ்பூ’ என்றபோது என்ன நினைத்தீர்கள்?
- எம்.கண்ணன், திருவண்ணாமலை; எம்.ஆசாத், சென்னை.
அநியாயமா தோணுச்சு. ரொம்ப பாவம். ஏன்னா... அவங்க ஒரு திறமைசாலியான பெண். அவங்க வளர்ந்து வரும்போது இன்னொரு பெண்ணோடு ஏன் ஒப்பிட்டுப் பேசணும்? தனிப்பட்ட முறையில் அவங்களுக்கு எல்லா டேலன்ட்டும் இருக்கு. ஆனா, அவங்க இதை ரொம்பவும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு அப்படி கூப்பிடுவது தவறு.

நான் நடிக்க வந்த புதுசுல ‘நீங்கதான் ராதா சேச்சி... நீங்கதான் சாவித்திரியம்மா’னு யாராவது சொல்லியிருந்தா எனக்கு எப்படி இருந்திருக்கும்?
அப்படி சொல்றதை ஓரளவுதான் தாங்கமுடியும். ‘நீதான் அடுத்த சாவித்திரி’னு சொல்லும்போது கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும். அப்புறம், நான் என் பெயரை காப்பாத்தியாகணும்னுதான் ஆசைப்படுவேன். அது நியாயமும் கூட!

உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?
- தமிழ்ச்செல்வி, சென்னை - 3.
ஓயெஸ். டிரைவிங் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுலயே டிரைவிங் கத்துக்கிட்டேன். மும்பைல இருந்தப்ப எங்க டிரைவர் ஒருத்தர் எனக்கு கார் ஓட்ட கத்துக் கொடுத்தார்.

நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை எப்படிக் கையாள்வது?
- டி.ரவிக்குமார், பொள்ளாச்சி.
நம்பிக்கைத் துரோகம் பண்றவங்க அப்படி பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க. நாமதான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கணும். யார்கிட்ட பழகறோம்... யார் மேல நம்பிக்கை வச்சிருக்கோம்னு கொஞ்சம் பார்த்து பழகறது நல்லது. நம்பிக்கைத் துரோகம் பண்றவங்களின் செயல்கள் ஆரம்பத்துலயே நமக்கு கொஞ்சம் தெரிஞ்சுடும். ஆனா, சில நேரங்கள்ல அவங்கமீது அளவுக்கு மீறி நம்பிக்கையும் பாசமும் வைக்கறதால அது நம்ம கண்ணை மறைச்சுடும். அந்த நேரத்துல கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கறது நல்லது.

உங்களின் பதில்களில் நகைச்சுவை அவ்வளவு மிளிர்கிறது. உங்கள் நகைச்சுவையை வீட்டில் பாராட்டுவார்களா?
- அந்தோணிபாபு, அம்பை.
என் கணவருக்கு கோவை குசும்பு அதிகம். அவரது ஒவ்வொரு ஒன்லைனரிலும் காமெடி தெறிக்கும். என் பசங்க அதையெல்லாம் வச்சு, என்னை கலாய்ப்பாங்க. நான் வெளிய எவ்ளோ டெரர் பீஸா தெரியறேனோ... அதுக்கு மாறா வீட்ல அவ்ளோ காமெடி பீஸ்! என் காமெடிக்கு என் பசங்ககூட சிரிக்கறதில்ல! நீங்க பாராட்டறீங்க... நன்றி... நன்றி! இந்த இதழ் வெளியானதும் இந்த பதிலை என் கணவர், பசங்ககிட்ட அப்படியே காட்டப்போறேன். இதைப் படிச்சிட்டு அவங்க விழுந்து விழுந்து சிரிக்கப்போறாங்க!

‘‘ஜனநாயகம் பற்றிப்பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது’’ என்கிறாரே வைகோ?
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
உண்மைதானே! ஜனநாயகம் அப்படின்னா என்னான்னு பாஜகவுக்கு தெரியாது. அதுக்குக் காரணம், ஜனநாயகத்துல அவங்களுக்கு நம்பிக்கை கிடையாது. பாஜகனா என்ன? நாக்பூர்ல யாரோ ஒருத்தர் உட்கார்ந்துட்டு போடுற சட்டத்தைத்தான் அவங்க முன்னெடுத்துப் போகணும். வேற வழியில்ல! பாஜக ஒரு சங்கத்துக்கு, ஒரு அமைப்புக்கு அடிமையாக இருக்கும் போது, அவங்க ஜனநாயகத்தைப் பத்தி பேசக்கூடாது.

அவங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிமையா இருக்காங்க. ஒரே சாதி, ஒரே மதம், ஒரே நாடுதான் இருக்கணும்னு நினைக்கும் அமைப்பு அது. ஜனநாயகம்னாலே அங்க எதிர்க்கட்சி இருக்கணும். எதிர்க்கட்சி காங்கிரஸ்தானே! காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கப் பார்க்கறாங்க. அப்படி எதிர்க்கட்சி இல்லைனா சர்வாதிகாரமாகத்தான் இருக்கும். அப்புறம், அங்க ஜனநாயகம் எப்படி இருக்கும்?

சுந்தர்.சி நடிப்பில் உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்? ஏன்?
- எல்.பவானி, திருநெல்வேலி.‘தலைநகரம்’. அவர் ஹீரோவா நடிச்ச முதல் படம் அது. இயல்பாவே அவருக்கு கூச்ச சுபாவம் அதிகம். அவருடைய எமோஷன்ஸை எப்பவும் அவர் வெளிய காட்டமாட்டார். அதனாலயே அவர் எப்படி நடிக்கப்போறாரோனு கொஞ்சம் பயந்தேன். ஆனா, படத்துல அவருடைய கேரக்டரை subtleலா underplay பண்ணி அசத்திட்டார்.

உங்க நட்பு வட்டம் பத்தி சொல்லுங்க?
- மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்.
நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. பிருந்தா மாஸ்டரை 86ல சந்திச்சேன். 33 வருஷத்துக்கு மேல நாங்க நட்பா இருக்கோம். காஸ்ட்யூம் டிசைனர் அனு பார்த்தசாரதியும் நானும் முப்பது வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரும் நானும் 27 வருஷமா ஃப்ரெண்ட்ஸ்.

87ல இருந்து சுப்பு பஞ்சு நெருங்கிய நண்பர். ‘மைக்கேல் மதனகாமராஜன்’ல அவர்தான் புரொடியூசர். அப்போதிலிருந்தே அவரைத் தெரியும்.
ஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேரும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப் வச்சிருக்கோம். தினமும் அதுல பேசிக்குவோம். யார் எங்க இருந்தாலும் ரிப்ளை பண்ணிடுவோம்.

(பதில்கள்  தொடரும்)