இடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...



வைரல் ரம்யா பாண்டியனின் மடிப்புகள்

இணைய ஏரியாவில் செம ‘ஹாட்’, ரம்யா பாண்டியன்தான். காரணம், இடுப்பும் அரைஞாண் கயிறும்!இவை இரண்டும் 2K கிட்ஸ் பார்க்காதவை! சுரிதாரே தேசிய உடையான சூழலில் இடுப்பையும் அதன் மடிப்பையும் அதனுள் நெளிந்து வளைந்து செல்லும் அரைஞாண்கயிறுமாக ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்...
போட்டோ ஷூட்... புதையலை கண்டெடுத்த மகிழ்ச்சியை இளைஞர்களுக்கு கொடுத்திருக்கிறது!‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ படங்களில் ஹோம்லியாக புன்னகைத்த இவர் இப்போது எட்டு திக்கும் வாழ்த்து பூங்கொத்துகள் குவிவதால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்.

‘‘நம்பவே முடியலை பாஸ்! ஃபேஸ்புக், டுவிட்டர்னு எதுல பார்த்தாலும் என் போட்டோஸா இருக்கு. மீம்ஸ், கவிதைகள்னு ஒவ்வொரு போட்டோவையும் வைச்சு செய்யறாங்க!இதுக்கு முன்னாடி கூட க்ரீன் கலர் சேலைலயும், மாடர்ன் காஸ்ட்யூமிலும் போட்டோ ஷூட் எடுத்திருக்கேன். ஆனா, அதுக்கெல்லாம் ரெஸ்பான்ஸ் கம்மிதான்.

ஆனா, இப்ப எடுத்த போட்டோ ஷூட்டுக்கு..? கனவா நனவானு சந்தேகமா இருக்கு! ஆக்சுவலா எந்த திட்டமிடலும் இல்லாமதான் இந்த போட்டோ ஷூட் நடந்தது. என் நண்பர் சுரேந்தர்தான் இந்த போஸை எல்லாம் க்ளிக்கினார். அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? அடிப்படைல சுரேந்தர் போட்டோகிராஃபர் கிடையாது. வருங்கால இயக்குநர்! போட்டோகிராஃபி அவர் ஹாபி. சும்மா நேச்சுரலா ஷூட் பண்ணினது இப்படி வைரலாகிடுச்சு!’’ கண்களைச் சிமிட்டி புன்னகைக்கும் ரம்யா பாண்டியன், தன் வீட்டு மொட்டை மாடியில்தான் இப்படங்கள் எடுக்கப்பட்டன என்கிறார்.

‘‘எங்க வீட்டு டெரஸ்ல எப்பவும் கார்டன் பண்ணுவோம். காய்கறியில் இருந்து பூந்தோட்டம் வரை பசுமை கொஞ்சும். இந்த வருஷம் சென்னைல தண்ணீர் பஞ்சம் வந்ததால டெரஸ்ல கார்டனிங் பண்ணலை. அதுக்கு பதிலா பசுமையா என் போட்டோ ஷூட் நடந்தது!

காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சு எட்டரைக்குள்ள முடிச்சுட்டோம். இந்த ப்ளூ கலர் சேலை, என் கஸினோட மனைவி அதிதி சித்தார்த்தின் ஐடியா. அவர் ஒரு டிசைனர். இந்த போட்டோஸ் வைரலானதுல எல்லோருமே ஹேப்பி!’’ பித்தளை குடத்துக்குள் உருட்டிவிட்ட கோலிக் குண்டாக சிரிக்கிறார் ரம்யா பாண்டியன். ரெண்டு படங்கள்ல நடிச்சு கிடைக்காத புகழ் இந்த ஒரேயொரு போட்டோ ஷூட்ல..?

யெஸ் யெஸ். ‘ஆண் தேவதை’க்கு அப்புறம் வாய்ப்புகளே வரலைனு சொல்ல மாட்டேன். நிறைய ஆஃபர்ஸ் வந்தது. ஆனா, எல்லாமே ஏற்கெனவே நான் நடிச்ச கேரக்டர்ஸ் மாதிரியே இருந்துச்சு. ஸோ, பண்ணத் தோணல. எதுலயும் கமிட் ஆகாம ரிலாக்ஸா இருந்தேன்.
நல்ல ரோல் எனக்கு கிடைக்கும்னு உறுதியா நம்பறேன். அதனாலதான் அடிக்கடி போட்டோ ஷூட் பண்றேன்.

இப்ப என் போட்டோ வைரலானதால நல்ல டீம், நல்ல இயக்குநர்கள்னு ஆஃபர்ஸ் தேடி வருது. சீக்கிரமே விவரங்கள் சொல்றேன்!
என்ஜினீயர் ரம்யா, நடிகையானது எப்படி?காலேஜ் படிக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ் இயக்கின குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். அந்த வகைல நாலு ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணிருக்கேன். அதுல ‘மானே தேனே பொன்மானே’ல நடிக்கிறப்ப எனக்குள்ள சினிமா ஆசை துளிர் விட்டது.

ஒரு நிமிஷ ஃபிலிம் அது. ஆனா, அதுல நான் அழுற சீனுக்காக 40 நிமிஷங்கள் வரை அழுதேன்! அந்தளவு அந்த கேரக்டர் என்னை பாதிச்சது. சினிமாலயும் பர்ஃபார்ம் ரோல்ஸ் பண்ண விரும்பினேன். மூவி ஆஃபர்ஸும் வந்தது. ‘டம்மி டப்பாசு’ல அறிமுகமானேன். ‘ஜோக்கர்’ கிடைச்சது ஸ்வீட் ஆக்ஸிடென்ட். பாலாஜி சக்திவேல் சாரோட ‘ரா ரா ராஜசேகர்’ படத்தோட ஆடிஷனுக்கு போயிருந்தேன். ஆனா, செலக்ட் ஆகல. அங்கிருந்த விஜய் மில்டன் சார்னாலதான் ‘ஜோக்கர்’ கிடைச்சது.

‘ரம்யாவை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும்’னு டுவிட்டர்ல விவேக் உங்களுக்கு சிபாரிசு பண்ணியிருக்காரே..?விவேக் சாருக்கு தேங்க்ஸ். ‘தமிழை தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டு
கோள்’னு சார் டுவிட் பண்ணியிருக்கார். அவரோட பெருந்தன்மைக்கு நன்றி.

கூடவே ஷங்கர் சார், அட்லி சார், முருகதாஸ் சார்னு பலரையும் அதுல tag செய்திருந்தார். ‘ஆண் தேவதை’ படத்தின் ஷோல விவேக் சாரை பார்த்திருக்கேன். அதுல என் நடிப்பை பாராட்டியவர் ‘தமிழ் சினிமாவில் மட்டுமில்ல, இந்திய சினிமாவிலும் பெரிய ஆளா வரணும்’னு வாழ்த்தினார். நல்ல மனசுக்காரர்.  அடுத்த போட்டோஷூட்ல இன்னும் கொஞ்சம் க்ளாமரை எதிர்பார்க்கலாமா?

ஹலோ..! இது இயல்பான மேக்கப் இல்லாமல் எடுத்த போட்டோ ஷூட். சேலைலதான் க்ளாமர் தூக்கலா தெரியும்னு சொல்வாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை கவர்ச்சி என்பது பார்ப்பவர் கண்கள்ல இருக்கு.அடுத்த போட்டோஷூட் எப்படி இருக்கும்னு இன்னும் ப்ளான் பண்ணல. என் சிஸ்டர் சுந்தரி, காஸ்ட்யூம் டிசைனர்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். சுந்தரியும், அதிதியும் பொட்டிக் வச்சிருக்காங்க. இந்தியா முழுவதும் அலைஞ்சு திரிஞ்சு அவங்க விதவிதமாக தேடிப் பிடிச்சு வாங்கின சேலைகளை நான் ஈஸியா அள்ளிட்டு வந்து  ஷூட் பண்ணிடுவேன்.

எனக்கு எல்லாவிதமான ரோலும் பொருந்தும்னு காட்டத்தான் இப்படிப்பட்ட ஷூட் அவசியமா இருக்கு. இல்லைனா ‘இந்த பொண்ணுக்கு கிராமத்து ரோல்தான் செட் ஆகும் போல’னு சொல்லிடுவாங்க! நெட்ல எல்லாருமே உங்க இடுப்பு மடிப்பை பாராட்டி கவிதையா கொட்டியிருக்காங்களே..? அதுல உங்களுக்குப் பிடிச்ச கவிதை..? அஸ்கு புஸ்கு! சொல்ல மாட்டேன். ஆனா, நிறைய கவிதைகளைப் படிச்சு ரசிச்சேன். அந்த கவிஞர்
களுக்கு நன்றி!                  

மை.பாரதிராஜா

சுரேந்தர்