சிரிங்க பாஸ்‘‘ரெண்டு நாளா ஏன் பிச்சை எடுக்க வரல?’’
‘‘வருமானவரி ரெய்டு தாயே!’’

‘‘தலைவரை போலீஸ் தேடுதே... என்ன விஷயம்..?’’
‘‘பக்கத்து ஆத்துல மணல் ரொம்ப இருக்காம்... அதை சொல்லத்தான்!’’

‘‘பொண்ணு பார்க்கப் போன இடத்துல நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..?’’
‘‘ஆமா... அங்கயும் வந்து உங்க வீட்ல எத்தனை ஓட்டு இருக்குன்னு கேட்டுட்டார்!’’

‘‘நம்ம கபாலியோட அடுத்த டார்ெகட் என்னவாம்?’’
‘‘எஸ்.பி.க்கே நேரடியா மாமூல் கொடுப்பதாம்!’’

‘‘ஹோட்டல்ல வேலை கேட்டு போனியே... இன்டர்வியூல என்ன கேள்வி கேட்டாங்க?’’
‘‘அம்மா கடை இட்லிக்கும், அப்போலோ இட்லிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டாங்க!’’

‘‘டாக்டர் கை விட்டுட்டாரு...’’
‘‘பயப்பட வேணாம்... உங்ககிட்ட பணம் இருக்கானு டெஸ்ட் பண்றார்!’’

‘‘புதுக் கட்சிப் பெயரை அறிவிக்கிற கூட்டத்துல ஏதோ கோஷ்டி சண்டையாமே...’’
‘‘ஆமா... அதனால தன் கட்சிக்கு ‘கோஷ்டி சண்டை கழகம்’னு தலைவர் பேர் வைச்சுட்டார்!’’

எஸ்.கே.செளந்தர்ராஜன்