சிரிங்க பாஸ் வேமாஜி
“மந்திரியாரே... மகாராணியைக் காணோமே?’’ “உங்கள் தாயாரின் பிடுங்கல் தாங்க முடியாமல் மகாராணி பதுங்கு குழியில் இருக்கிறாராம் அரசே!’’
“அவர் வீட்டு வாசலில் ஏன் கூடாரம் போட்டிருக்காங்க?” “அவரை ‘கூடாரம் கொண்டான்’னு எல்லாரும் சொல்லணுமாம்!”
“உங்க வீட்டுக்கு வர்றவங்களை எல்லாம் உங்க நாய் ஏன் மோப்பம் பிடிக்குது?” “ஏதாவது தின்பண்டம் வாங்கிக்கிட்டு வர்றாங்களான்னு பார்க்கும். எதுவும் இல்லைன்னா கடிச்சுடும்!”
“இங்க பாரு... அந்தப்படம் சனிக்கிழமை ரிலீஸ் ஆகறதால ‘சனித்திரை’யில் காண்கனுதான் சொல்லணும்னு கட்டளையிடறதெல்லாம் நல்லா இல்ல!’’
“யாரந்த ஆசாமி? கதவுகளை எடுத்துக்கிட்டுப் போறாரே?” “டோர் டெலிவரி செய்பவராம்!”
“பிரதமரை 12 மணிக்குப் பிறகுதான் பார்க்க முடியுமா... ஏன்?” ‘‘அவர் P.M. ஆச்சே!”
“என்னது... ரண சிகிச்சை நிபுணரின் மனைவியும் சிகிச்சை செய்வாங்களா?” “ஆமா. ‘ஆபரண’ சிகிச்சையாம். அவர் ஆபரேஷன்ல சம்பாதிக்கறதையெல்லாம் இவங்க நகையா மாத்திடுவாங்க!”
“தலைவர் மப்பில் பேசறாருன்னு எப்படி சொல்ற?” “இந்தி மொழி கத்துக்க விருப்பம் இல்லாதவங்க உடல் மொழி கத்துக்கலாம்னு பேசறாரே!”
“மன்னா நீங்க பெர்முடாஸ் போட்டுக்கற மாதிரி மகாராணியும்...” “ஐயய் யோ...” “லெக்கிங்ஸ் போட்டுக்கணுமாம்!”
|