அரசியலில் உங்களின் ரோல் மாடல் யார் ?



நீங்கள் புத்தகங்கள் படிப்பதுண்டா?
- செண்பகவல்லி, திண்டுக்கல்.


இப்ப படிக்கறதில்ல. ஆனா, நிறைய நிறைய படிச்சதுண்டு. டோலிவுட் ஹீரோக்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷினால்தான் எனக்கு புத்தகங்கள் படிக்கற  பழக்கம் வந்துச்சு. எனக்கு முதன்முதலில் புத்தகம் பரிசளிச்சவர் நாகார்ஜுனா. robert longdon, dan brown, harrold robbins, sidney sheldonனு ஒரு  பெரிய லிஸ்ட்டே போட்டு புத்தகங்கள் தேடித்தேடி வாங்கிப் படிச்சிருக்கேன். முன்னமே உங்ககிட்ட சொன்னது மாதிரி ஆட்டோபயாகிராஃபி படிக்கறது  பிடிக்காது. சுயமுன்னேற்ற நூல்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டேன். ஃபிக்‌ஷன்ஸ் விரும்பிப்படிப்பேன்.

உங்க கையில் வரைந்திருக்கும் டாட்டூஸ் அழகா இருக்கே?
- எஸ்.முத்துப்பாண்டி, திருப்பூர்.


தேங்க்ஸ். ஒரு கையில என் பசங்க பெயர் இருக்கு. இன்னொரு கைல என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் இனிஷியல்ஸ் இருக்கு. ஒருமுறை ஃபாரீன்  போயிருந்தபோது, ஒரு டாட்டூ கடையைத் தாண்டிப் போயிட்டிருந்தேன். நாமளும் ட்ரை பண்ணிப் பார்க்கலாமேனு வரைஞ்சதுதான் இது.

எந்த உணவை சமைப்பதில் நீங்க எக்ஸ்பர்ட்?
- மீனாள், ஈரோடு.


இந்தக் கேள்விக்கு என் வீட்டுக்காரர் பதில் சொல்றதுதான் சரியா இருக்கும் மீனாள். என் பசங்கள பொறுத்தவரை நான்தான் இந்த உலகத்திலேயே  சிறந்த சமையல் கலைஞர்னு பெருமையா சொல்வாங்க. உடனே என் கணவர், ‘பசங்கள நீ ரொம்ப ஏமாத்தி வச்சிருக்கே’னு கூலா சொல்வார். ஆனா,  ஓரளவு நல்லா சமைப்பேன். பொதுவான உணவுகள் தவிர நார்த் இண்டியன் ஃபுட்ஸ், பிரியாணி நல்லா பண்ணுவேன். சாம்பார் நல்லா வைப்பேன்.  என்னை மாதிரி க்ரூஸ்ஃபி தோசை வேற யாராலேயும் வார்க்க முடியாதுனு பசங்க சொல்றாங்க!

கலைஞர் மறைந்து ஓராண்டு ஓடிவிட்டதே...?
- கே.பால்ராஜ், கோவில்பட்டி.


ஆமாங்க. அவர் இல்லாத தமிழகத்தை நினைச்சுக்கூட பார்க்க முடியல. அப்படி ஒரு தலைவர் மீண்டும் வருவாரானு கேட்டால் அதுக்கு பதில்  சொல்லவே முடியாது. உடல் ரீதியாக அவர் இல்லையே தவிர எல்லோர் மனசிலும் அவர் இன்னும் வாழ்ந்திட்டிருக்கார். கலைஞர் அவர்களின்  புன்னகை, கையசைப்பு, மென் நடை அத்தனையும் இன்னும் பசுமையா நினைவில் ஓடுது. தலைவர் மீண்டும் வந்து, புன்னகைத்து ‘என் உயிரினும்  மேலான அன்பு உடன்பிறப்புகளே...’னு சொல்லமாட்டாரானு அவருடைய தொண்டர்கள் இன்னும் ஏங்கறதை பார்க்கறோம். தமிழ் மொழி, தமிழ்நாடு,  தமிழ்ப் பெண்கள்னு மகளிரின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு உழைத்தவர். தந்தை பெரியார் வழியில் பெண்களுக்கு முதன் முதலில் சொத்துரிமை,  பெண்களுக்கு சம உரிமை, பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்ற நோக்கில் எத்தனையோ வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கியவர் டாக்டர்  கலைஞர். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. அவர் இன்னும் இருக்கார். இந்த தமிழகத்தை  பார்த்துக்கிட்டிருக்கார்.

நடிகர் திலகத்தின் சகோதரியும், பாலிவுட் பாடகியுமான லதா மங்கேஷ்கரை நேரில் நீங்கள் சந்தித்ததுண்டா?
- செந்தில்வேல், அரக்கோணம்;
மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம்.


இந்தியில் நான் குழந்தை நட்சத்திரமாக நடிச்ச படம், ‘dard ka rishta’. அந்தப் படத்துல சைல்ட் ஆர்ட்டிஸ்டான எனக்கொரு சோலோ பாட்டு இருந்தது.  அந்தப் பாடலை லதா மேம்தான் பாடினாங்க. அதன் ஒலிப்பதிவின்போது அவங்க கூடவே நானும் இருந்திருக்கேன். அவங்க மடியின்மீது உட்கார்ந்தும்  பேசியிருக்கேன். அவங்க வாய்ஸைப் போலவே அவங்களும் ஸ்வீட்டா பழகுவாங்க. ஸ்வீட் மெமரீஸ்.

யாருடைய மரணம் தங்களை மிகவும் பாதித்தது?
- சுப்பிரமணியன், திருநெல்வேலி.


என் ஆன்ட்டி உபன் ஃபெர்னாண்டஸின் மறைவு. அவங்க என் ஹேர் டிரெஸ்சரா இருந்தவங்க. தாய்க்கு சமமானவங்களாகவும் இருந்து என்னை  பாத்துக்கிட்டவங்க. 2011ல கேன்சர்ல இறந்துட்டாங்க. அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்

உங்கள் தன்னம்பிக்கைக்கு யார் காரணம்?
- எம்.எஸ்.சாய்கவின், பொள்ளாச்சி.


நான்தான். என் தன்னம்பிக்கைக்கு என்னைவிட வேறு யார் காரணமாக இருக்க முடியும்?!

பெண்ணின் உண்மையான அழகு எது?
- டி.ரவிக்குமார், பொள்ளாச்சி.


பெண்ணாகப் பிறப்பதே அழகுதானே! உண்மையான அழகு என்பது பெண்ணின் பொறுமைதான்.

அரசியலில் உங்களின் ரோல் மாடல் யார்?
- லாவண்யா, சென்னை.


ரோல் மாடல் கிடையாது. இவங்களப் பார்த்துதான் அரசியலுக்கு வந்தேன்னு யாரையும் சொல்ல மாட்டேன். ஆனா, அரசியல்ல என்னோட தந்தை  டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

நீங்க சின்னத்திரையில் நடிக்க வந்ததன் ரகசியம் என்ன?
- க.நஞ்சையன், சூனேஸ்வரன்பட்டி.


ரகசியம் எதுவுமில்ல. என்னோட மகள்களாலதான் சின்னத்திரை பக்கம் வந்தேன். அப்ப அவங்க கைக்குழந்தையா இருந்தாங்க. சினிமா பண்ணணும்னா,  சரியான டயத்துல ஸ்பாட்டுல இருக்கணும். நிறைய அவுட்டோர் ஷூட் போகணும். வாரக்கணக்கில் வெளியூர், வெளிநாடுனு ஒர்க் போகும். பசங்களை பார்த்துக்க வேண்டியதால சினிமா பக்கம் போகல. என் சொந்த தயாரிப்பு நிறுவனம்னா பரவாயில்ல... படப்பிடிப்புக்கு கொஞ்சம் லேட்டா  போனாலும் சமாளிச்சுக்க முடியும். ஆனா, வேறொருத்தர் கம்பெனியில் அதெல்லாம் பண்ண முடியாது. அதுக்காகவே தயாரிப்பு நிறுவனம்  தொடங்கினோம்

காவிரியில், முல்லைப் பெரியாரில், பாலாற்றில் தண்ணீர் விட காங்கிரஸ் எந்த முயற்சியும் செய்யவில்லை என்கிறேன். சரிதானே?
- பி.சாந்தா, மதுரை - 14; சங்கீதா, தாராபுரம்; விஷ்ணு, சென்னை - 76.


இல்லை! இது ரெண்டு மாநிலத்துக்கிடையேயான ஒரு விஷயம். ஒவ்வொரு மாநிலத்துக்கிடையே என்ன ஒப்பந்தங்கள் இருக்குதுனு நமக்குத் தெரியாம  பேசிடக் கூடாது. பொதுமக்களைப் பொறுத்தவரை செய்தித்தாள்களில் வர்ற நியூஸை மட்டுமே நம்பி பேசிட்டிருப்பாங்க. முல்லைப் பெரியாரைப்  பொறுத்தவரை தமிழகத்துக்கும் கேரளாவுக்குமான அக்ரிமென்ட்டை முழுசா படிச்சபிறகுதான் பேசமுடியும். அதுவும் கோர்ட்ல இருக்கற ஒரு விஷயம்  அது. நம்ம ஊகங்களை எல்லாம் பேசுறது சரியானதல்ல!

நடித்ததில் பிடித்த படங்கள்..?
- ராணிஜோதி, விருதுநகர்.


கண்டிப்பா சொல்ல முடியாதுங்க! கிட்டத்தட்ட இரு நூறு படங்கள் நடிச்சிருக்கேன். எல்லா கேரக்டர்களையும் விரும்பித்தான் நடிச்சிருக்கேன். எல்லா  கேரக்டர்ஸும் பிடிச்ச கேரக்டர்ஸ்தான்.

(பதில்கள் தொடரும்)