ஐ லவ் அஜித் !! : மனம் திறக்கும் ராஷி கண்ணா



ட்ரா பெரி ராஷி கண்ணா இப்ப செம ஹாட் பெரி! யெஸ். ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’ என த்ரில்லர் ஏரியாக்களில் திகுதிகுத்த பொண்ணு  இப்போது பிங்க் பிகினியில் புது லுக் புன்னகையில் கிளுகிளுக்கிறார்.

முதல் செலிபிரிட்டி க்ரஷ்..?

ஷாரூக்கான்! அவரோட ரொமாண்டிக் ஃபிலிம்ஸ், சீன்ஸ் ரொம்பவே ரசிப்பேன். இப்பவும் சில ரொமாண்டிக் சீன்ஸ் பார்க்கறதுண்டு. தமிழ் ஹீரோஸ்ல  அஜீத் சார் பிடிக்கும். அவரோட ஸ்மைல்... இட்ஸ் ரியலி கில்லர்!

கவிதை எழுதுவதுண்டா?

எப்பவாவது! என் hidden டேலன்ட் அதுதான். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உமன்ஸ் டே வந்தப்ப அந்த தினத்தை கொண்டாடியும், அப்புறம் உலக  கவிதைகள் தினத்தன்னிக்கும் ஒரு கவிதை எழுதினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.

எப்ப பாடகியாகப் போறீங்க?

சீக்கிரமே. தமிழ்ல ‘கண்ணால... கண்ணால...’, ‘காதல் கிரிக்கெட்டு...’ பாடல்கள் என் ஃபேவரிட். சின்ன வயசுல இருந்தே பாடகி ஆகணும்னு லைட்டா  ஒரு ஆசை. ரஹ்மான் சாரோட மியூசிக் பிடிக்கும். அவரோட இசையில் பாடணும். தமிழ்ல விஜய், தனுஷ், சிம்புனு ஹீரோக்கள் நல்லா பாடவும்  செய்யறாங்க. அதே மாதிரி ராஷியும் பெயர் வாங்கணும்!

கோலிவுட் பழகிடுச்சா?


எஸ். இப்ப கொஞ்சம் கொஞ்சம் தமிழ் புரியுது. லிட்டில் தமிழ் பேசுவேன். ஸ்பாட்டுல மறுநாள் சீனுக்கான டயலாக் பேப்பரை முதல்நாளே கேட்டு  வாங்கிடறேன். அப்புறம் என்னோட தமிழ் ஃப்ரெண்ட்ஸுக்கு போன் செய்து, ‘அந்த டயலாக்கிற்கு என்ன அர்த்தம்? அதை தமிழ்ல எப்படி பேசணும்?  எந்த இடத்துல எமோஷன் காட்டணும்? எங்கே என் உச்சரிப்பை ஸ்டாப் பண்ணணும்னு என் டவுட்ஸ் எல்லாத்தையும் தெளிவா கேட்டு க்ளியர்  பண்ணிடுவேன். அந்த ஹோம் ஒர்க்கோடுதான் அடுத்தநாளுக்கான ஷூட் போவேன். இங்கே நான் என்ட்ரி ஆனதிலிருந்து இதை கடைப்பிடிக்கறேன்.

ஃபுட் ஹேபிட்..?

தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்துடுவேன். உடனே கொஞ்சம் வாம் வாட்டர் எடுத்துக்குவேன். 8 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட். அதுல வொயிட் எக்,  ஒரு டீஸ்பூன் நெய் நிச்சயம் உண்டு. 11 மணிக்கு பட்டர் மில்க் ஒரு கிளாஸ் மடக் மடக்!ஷூட்ல இருந்தாலும் சரி, வீட்ல இருந்தாலும் சரி... ஒன்றரை  மணிக்கு லன்ச். மாலை நாலரைக்கு ஃப்ரூட் சாலட். ஃபிட்னஸ் ஒர்க்அவுட் பண்றவங்களுக்கு இது அவசியமானது. நைட் எட்டு மணிக்கு டின்னர்.  ஹெவி ஃபுட்ஸ் எடுத்துக்க மாட்டேன். thai ஃபுட்ஸ் பிடிக்கும். ஒன்பது மணிக்கு ‘குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்’தான்!

பிடிச்ச தத்துவம் ஒண்ணு சொல்லுங்க..?


This becoming will ask for your breath, patience and for your fight, perseverance. Transformation is made of both surrender and strength...’ சொன்னது  யாரோ! ஆனா, விஷயம் நல்லா இருக்குதுல்ல!

* மை.பாரதிராஜா