நாமும் எஸ்கிமோ ஆகலாம்!
எஸ்கிமோக்களைப் போல ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று ஆசையா? உடனே ஹம்தா பள்ளத்தாக்கிற்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். மணாலியிலிருந்து 18 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறது ஹம்தா பள்ளத்தாக்கு. இயற்கையின் ஆச்சர்யங்கள் நிறைந்த அற்புத நிலப்பகுதி இது.
 இங்கே ‘இக்ளூ’ என்ற மூன்று பனி வீடுகளை சுற்றுலாப் பயணிகளுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். வெளியே அடிக்கும் ஜீரோ டிகிரி குளிரைவிட இக்ளூவுக்குள் குளிர் குறைவாக இருக்கும். இதற்காக பிரத்யேகமான ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பனி வீட்டில் நான்கு பேர் வரைக்கும் தங்க முடியும். உணவு மற்றும் இதர வசதிகளும் உண்டு. தவிர, பகலில் ஸ்கேட்டிங், ஸ்நோபோர்டிங் போன்ற விளையாட்டுகளும், இரவில் கேம்ப் ஃபயரிங்கும் உள்ளன. பகலில் மட்டும் தங்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.1,500. ஒரு நாள் முழுக்க தங்க ரூ.5,500.
த.சக்திவேல்
|