ஃபன் லைஃப்




*Coffee Table


வெளிநாட்டினருக்கு எல்லாமே ஜாலி கேலி ஃபன்தான் போலிருக்கிறது. சாலையில் நடந்து செல்லும்போது கார் ஒன்று தண்ணீரை நம்மேல்  அள்ளித்தெளித்தபடி கடந்து சென்றால்... கையில் இருந்த வடை பார்சல் பேப்பரைக் குப்பைத்தொட்டியில் போடும்போது, தவறுதலாக மொபைல்  போனையும் போட்டுவிட்டால்... இப்படி எதேச்சையாக நடக்கும் செயல்களையும், அதற்கு நாம் காட்டும் ரியாக்‌ஷன்ஸையும் தொகுத்து க்யூட்டான  கலர்ஃபுல்லான வீடியோவாக்கியிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கின் ‘Food Gasmic’ பக்கத்தில் ‘Fun Life Hacks to Have Luck’ என்ற தலைப்பில்  இடம்பெற்றுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கேக் பேபி

லண்டனில் ஹாலிடே ட்ரிப்பை முடித்துவிட்டு ஃப்ரெஷ் பொக்கேவாக மும்பை திரும்பிவிட்டார் ஹன்சிகா. சூட்டோடு சூடாக எடின்பர்க் நகரத்தில்  வயிறு குலுங்கி சிரிக்கும் பொம்மை ஒன்றின் அருகே அமர்ந்து அதைப்போலவே ஹன்சியும் குலுங்கிக் குலுங்கி சிரித்ததை வீடியோவாக்கி  இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்திருக்கிறார். அப்புறமென்ன? 5 லட்சம் லைக்ஸையும் அள்ளிவிட்டார் அசத்தலாக!

மெனோபாஸை தள்ளிப்போடலாம்!

‘‘‘மெனோபாஸ்’ என்கிற மாதவிடாய் நிற்கும் காலத்தை 20 வருடங்களுக்குத் தள்ளிப்போட முடியும்...’’ என்று அடித்துச் சொல்கிறார் சிமோன் ஃபிஷல்  என்ற மருத்துவர். மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் தோன்றும் காலத்திலேயே ஊசிமுனை மூலம் செய்யப்படும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை  மூலம் மெனோபாஸை தள்ளி வைக்கலாம்.
தவிர, சினைப்பையின் ஒரு சிறு பகுதியை அகற்றி பின் அதை குளிரூட்டியில் சேமித்து வைத்து,  மாதவிடாய் நின்றுபோன நேரத்தில் அதை மீண்டும் சினைப்பையிலேயே ஒட்டவைப்பதன் மூலம் மெனோபாஸை தள்ளிப்போட முடியும் என்று தனது  குழுக்களுடன் சேர்ந்து நிரூபித்திருக்கிறார் மருத்துவர்.பொதுவாக மெனோபாஸிற்கு முன் பெண்களுக்கு ஞாபக மறதி, பதற்றம் மற்றும் பாலியல்  நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். அதேபோல மாதவிடாய் நின்றுபோன காலங்களிலிருந்து இதயப் பிரச்னை போன்ற தொல்லைகள்  அதிகரிக்கும். இனி மெனோபாஸுடன் இந்தப் பிரச்னைகளும் தள்ளிப்போகலாம்.

ஆட்டோ நேயம்


சாகர் என்ற ஆட்டோ டிரைவர்தான் மும்பையில் இப்போது ஹாட் டாக். மும்பை லோக்கல் ரயிலில் கணவருடன் ஏழு மாத கர்ப்பிணிப் பெண் பயணம்  செய்தார். ரயில் விரார் ஸ்டேஷனுக்கு வந்தபோது கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி எடுத்திருக்கிறது. உடனே அந்த ஸ்டேஷனில் தம்பதிகள்  இறங்கிவிட்டனர். கணவர் ஆட்டோவைத் தேடிப்போக, சாகர் அவர் கண்ணில் பட்டிருக்கிறார். விஷயத்தை தெரிந்துகொண்ட சாகர், சில நிமிடங்களில்  பிளாட்பார்மில் ஆட்டோவைச் செலுத்தி கர்ப்பிணிப் பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். சாகரின் சாகச செயல்  வைரலாகிவிட்டது.

ஒயர்லெஸ் ஸ்பீக்கர்


மலிவான விலையில் கையடக்க ஒயர்லெஸ் ஸ்பீக்கர்களை சந்தையில் இறக்கியுள்ளது ‘போர்ட்ரோனிக்ஸ்’. புளூடூத், யூஎஸ்பி, எஃப்.எம் வசதிகளுடன்  இதிலுள்ள மைக்ரோபோன் மூலம் வாய்ஸ் கால்களையும் நாம் செய்ய முடியும். லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் என புளூடூத் வசதியுள்ள  டிவைஸ்களுடன் இதை இணைத்துக்கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்துக்கு இயங்குகிறது இந்த ஸ்பீக்கர். விலை. ரூ.1,999.

குங்குமம் டீம்