சிரிங்க பாஸ் வேமாஜி




“மன்னர் கோட்டையிலிருந்து கோட்-டை போட்டுக்கிட்டு எங்கே கிளம்பிட்டாரு?”
“வேட்-டைக்கு!”

“ஹோட்டல் முதலாளி இலக்கிய நயமா போர்ட் எழுதச் சொல்றாரு!”“எப்படி?”
“இன்றைய ஸ்பெஷல்: ‘எட்டுத் தொகை’-யல்னு எழுதணுமாம்!”

“சமாதானத் தூதுக்கு வெள்ளைப் புறாக்கள் கிடைக்கலைன்னு சொன்னீர்களே மன்னா... நான் வேற ஐடியா பண்ணிட்டேன்!”
“என்ன அது?”
“காக்காயைப் பிடிச்சு வெள்ளை பெயின்ட் அடிச்சுட்டேன்!”

“புலவரே.. எதற்காக பொற்கிழி துணியைத் திருப்பித் தருகிறீர்கள்?”
“அது கிழிஞ்சிருக்கு மன்னா!”

“உங்களுக்கு ஏற்ற மாதிரியெல்லாம் இங்கே ஷ்பெஷல் ஹெல்மெட் கிடையாதுன்னு சொன்னால் கேளுங்கய்யா...”

“என்னது? ஞாயிற்றுக் கிழமை மட்டும் ‘ஸ்டிராங்’கா இருப்பீங்களா?”
“ஆமாங்க. மற்ற நாளெல்லாம் வீக் டேஸ் இல்லையா?!”

“டிவி ரிமோட்டை எங்கே காணோம்?”
“இன்னிக்கு உங்க சொற்பொழிவு டிவியில் வருதுன்னு நான்தான் ஒளிச்சு வைச்சேன்!”

“மன்னா... எதிரி நாட்டு மன்னர் டுவிட்டரில் போர் அறிவிச்சிருக்காரு...”
“ஏன்?”
“கூரியர் புறாக்கள் ஸ்ட்டிரைக்காம்!”

“காது டாக்டர் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்காரு?”
“காது வலி சிகிச்சைக்கு ராவணன் வந்துக்கிட்டிருக்கானாம்!”