பிச்சை எடுத்தாரா ராதிகா ஆப்தே?



ராதிகா ஆப்தேவுக்கு வாயில்தான் சனி!ஆம். ‘கபாலி’யின் ரஜினிக்கு ஜோடியாக நடித்தாரே அவரேதான்.இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு லேட்டஸ்ட் ஆக அவர் பேசியிருப்பது.

ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் ராதிகா ஆப்தே, இப்பொழுது ‘லிபர்டி: எ கால் டு ஸ்பை’ படத்தில் உளவாளியாக நடிக்கிறார்.பிரச்னை இதுவல்ல. இதுதொடர்பாக அவர் உதிர்த்திருக்கும் முத்துக்கள்தான்.‘பாலிவுட் போல் இல்லாமல் ஹாலிவுட்டில் நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.

சம்பளமும் ஒழுங்காக கொடுத்துவிடுகிறார்கள். எனவே ஊதியம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலை ஹாலிவுட்டில் இல்லை..!’போதாதா..? இந்தித் திரையுலகை ஏன் ராதிகா ஆப்தே அசிங்கப்படுத்துகிறார் என ஆள் ஆளுக்கு பற்களைக் கடித்து நறநறக்கிறார்கள்.
பார்த்து பேசுங்க தாயி!

காம்ஸ் பாப்பா