என்னை யாருமே லவ் பண்ணலை!



சந்தன தேசத்தில் அறிமுகமானாலும் ரஷ்மிகா மந்தனாவின் கொடி டோலிவுட்டில்தான் பட்டொளி வீசி பளபளவென ஃப்ளையிங் கிஸ் அடிக்கிறது. விஜய்தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’டில் செம ஸ்கோர் அள்ளிய ராஷ்மி, அடுத்து கார்த்தியின் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.
நடிக்க வருவதற்கு முன்னர் ‘க்ளீன் அண்ட் க்ளீயர் ஃப்ரெஷ் ஃபேஸ்’ பட்டம் வென்ற ஹோம்லி புயல் ராஷ்மியின் பேச்சில் இனிக்கிறது தமிழ்.  ‘‘தமிழ் ஓரளவு கத்துக்கிட்டிருக்கேன். ஆனா, கன்னடமும், இங்கிலீஷும் அவ்ளோ ஃப்ளோவா பேச வராது.

எப்பவும் எனக்கு சென்னை ரொம்பவும் ஸ்பெஷல். ஏன்னா, நான் பிறந்தது கர்னாடகாவின் கூர்க் பக்கம் ஒரு கிராமம்னாலும் நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் இங்க சென்னைலதான் படிச்சேன். யெஸ். அப்ப எங்கப்பா இங்கதான் வேலை பார்த்துட்டு இருந்தார். மூணு வருஷம் இருந்திருப்போம். அப்புறம், கூர்க்ல ஸ்கூல் படிப்பு, டிகிரி முடிச்சேன். சைக்காலஜி, ஜர்னலிசம் படிச்சிருக்கேன்!

செகண்ட் இயர் படிக்கிறப்ப மாடலிங் பண்ணினேன். ‘க்ளீன் அண்ட் க்ளீயர்’ போட்டில கலந்துகிட்ட போதுதான் சினிமா வாய்ப்பு வந்தது. எனக்கு தியேட்டர் பேக்கிரவுண்ட் கிடையாது. ஸ்கூல்லயும் ஆக்டிங்ல பெயர் வாங்கினதில்ல. ஆனா, கன்னட ‘கிரிக் பார்ட்டி’ படத்துல அறிமுகமானப்ப ‘நல்லா நடிச்சிருக்கீங்க’னு எல்லாரும் பாராட்டினாங்க!

இப்ப வரை என்னாலயே அதை நம்ப முடியலை. கனவு மாதிரி இருக்கு!அடுத்து புனீத் ராஜ்குமார் சார் படம் பண்ணிட்டிருக்கும் போதே, டோலிவுட்ல ‘சலோ’ ஆஃபர் வந்துச்சு. அப்படியே தெலுங்கிலும் இன்ட்ரோ ஆனேன். இப்ப ‘டியர் காம்ரேட்’ மூலம் தமிழுக்கும் வர்றதுல ராஷ்மி செம ஹேப்பி...’’ கன்னங்கள் மினுமினுக்க புன்னகைக்கிறார் ராஷ்மி.

தமிழ்ப் படங்கள் பார்த்ததுண்டா..?
என்ன அப்படிக் கேட்டுட்டீங்க?! நிறைய பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். விஜய் சாரோட ‘மெர்சல்’ பார்த்தாச்சு. ‘அருவி’ பார்த்ததும் எமோஷனலா கனெக்ட் ஆகிட்டேன். விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ரொம்ப பிடிச்சிருந்தது.

இன்னும் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட் கைவசம் இருக்கு. ஹீரோயின்கள்ல சமந்தா மேம், த்ரிஷா, சாய்பல்லவி ஆக்ட்டிங் பிடிக்கும்.
ராஷ்மி சிங்கிளா..? டபுளா?ரெண்டு வருஷமா நான் சிங்கிள்தாங்க! அப்படீன்னா இதுக்கு முன்னாடி யாரை லவ் பண்ணுனீங்கனு கேட்டுடாதீங்க! நிறைய லவ் ஸ்டோரீஸ் இருக்கு. அந்த லவ்ஸ் எல்லாமே ஒன்சைட் லவ்வாகிடுச்சு. யாரும் என்னை விரும்பல போல!

பொதுவா ஒரு பையன்கிட்ட நான் நிறைய குவாலிட்டீஸ் எதிர்பார்ப்பேன். அவன் என்னை மாதிரி இல்லாம நைஸ் பர்சனா இருக்கணும். சிரிச்ச முகமா இருக்கணும். தைரியசாலியா... ஸ்மார்ட்டா... நகைச்சுவை உணர்வு அதிகமுள்ளவனா... இப்படி சொல்லிட்டே போகலாம்.
எப்படி போகுது கார்த்தியின் படம்..?

கார்த்தி சார் படம் இன்னும் ஷூட் தொடங்கல. ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் சார் இயக்கறார். ஆகஸ்ட்ல இருந்து டேக் ஆஃப் ஆகும். முதன்முதல்ல ஸ்டிரைட் தமிழ், அழகான ஒரு கேரக்டர்... படபடப்பா இருக்கு!                               

மை.பாரதிராஜா

அருண், கௌதம்