அஞ்சு பன்ச்-சந்தானம்
1.எந்த சோஷியல் மீடியாவிலும் சந்தானம் இல்லை. ‘அடிக்கடி ஆஜர் ஆகணும், வீண் தொந்தரவு...’ என தவிர்த்து விடுகிறார். 2.கடவுள் நம்பிக்கை அதிகம். தீவிர சிவபக்தர். தமிழகத்தின் முக்கியமான சிவன் கோயில்களுக்கு எல்லாம் விசிட் அடித்துவிட்டார்.
‘3.லொள்ளு சபா’வின் பழைய நண்பர்களை மாதம் ஒரு முறையாவது சந்திக்கிறார். அவர்களுக்கு பட வாய்ப்புகள், உதவிகள் செய்வதில் தாராளமாக இருப்பார்.
4.கார்த்தி, உதயநிதி, ஆர்யா மூவரும் அவரது நெருங்கிய வட்டத்தில் இருக்கிறார்கள். சிம்புவை மிகவும் மரியாதையோடு ‘குரு’ என்றே அழைப்பார்.
5.சந்தானத்திற்கு ஃபிட்னஸ் குரு ஆர்யாதான். அவரோடுதான் சனி, ஞாயிறுகளில் சைக்கிளிங் செல்கிறார்.
நன்மதி
|