ஓ போடு!



62 வயதில் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளுடன் நாடோடியாகத் திரியும் ஃபிராங்கோ விட்டாலி உண்மையிலே அபூர்வ மனிதர்.
- பிரேமா குரு, சென்னை; சாந்தகுமார், சென்னை; மனோகரன், மயிலாப்பூர்; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; கருணாகரன், போரூர்.

ஜப்பான் நாட்டு புத்தர் ஆலயங்களில் பனிக்கட்டி குளியல் படித்ததும் உடலும் மனமும் ‘ஜில்’லிட்டது.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ஆத்மநாதன், ஆற்காடு; ஜெயராமன், கோவிலம்பாக்கம்.

‘பப்’ - பணத்தை ஏராளமாகப் பிடுங்கும் மாடர்ன் சாராயக்கடை என்பதை விவரித்த கட்டுரை அதன் மீது போதை கொண்டிருப்பவர்களின் முகத்திலடித்து தெளிய வைத்த கோலிசோடா.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; அமிர்பத்ரா, சென்னை; பிரேமா பாபு, சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; கருணாகரன், போரூர்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி.

நெடுநாட்கள் எதிர்பார்த்து வந்ததென்பதால் ‘சிரிங்க பாஸ்’ பகுதிக்கு ஒரு பலத்த ‘ஓ’ போடலாம்.
- சரண் சுதாகர், வேளச்சேரி; சந்திரமதி, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; முரளி, நங்கநல்லூர்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘கடலில் மூழ்கும் தமிழகம்’ தமிழகம் முழுவதும் அறியப்பட வேண்டிய கட்டுரை. இதன் மூலம் மத்திய அரசின் அலட்சியத்திற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
- ப.மூர்த்தி, பெங்களூரு; மனோகர், மேட்டுப்பாளையம்; அ.யாழினி பர்வதம், சென்னை; ரவிக்குமார், பொள்ளாச்சி; கதிரவன், மதுரை; பழனிச்சாமி, திருப்பூர்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி.

வெறித்தனமான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜமாய்க்க விக்ரம் தயாராயிருக்கிறார். ஆனால், அவருக்குச் சரியான தீனி போடத்தான் ஆளில்லை.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்;  வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மகேஸ்வரி, பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; சங்கர், சென்னை;  செல்வி, சென்னை; கதிரவன், மதுரை.

நடுத்தர வர்க்கத்தினரும் அயல்நாடு செல்ல உதவும் மாதத்தவணை
திட்டம் வரவேற்கத்தக்க சேவை.
- ஜெயக்குமார், வேளச்சேரி; சரவணன், சென்னை; கார்த்திக், திருநெல்வேலி;
சாய்கவின், பொள்ளாச்சி; சந்திரமதி, சென்னை.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மார்கன்தான் முக்கிய காரணம் என்று அவர் மார்தட்டிக் கொள்ளலாம். இதை விவரித்த கட்டுரை ஜோர்.
- மலர்விழி, சென்னை; செம்மொழி, சேலையூர்; சாந்தா, மதுரை; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ரீடர்ஸ் வாய்ஸ்