கொஞ்சம் சிரிங்க பாஸ்



‘‘வீட்டு பாத்ரூம் வாசல்ல இசையமைப்பாளர் ஏன் மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிக்கறார்?’’
‘‘உள்ளே இருப்பவர் பாத்ரூம் பாடகராம்!’’

‘‘வெள்ளம் எப்ப வருமோன்னு பயந்து இப்படிக் கப்பல் வடிவத்துல வீட்டைக் கட்டிட்டாராம்!’’

‘‘சாதம் ஏண்டி இப்பிடிக் கூழ் மாதிரி இருக்கு?’’
‘‘அத்த... இது ஆடி மாசம் இல்லையா..? அதான்!’’

‘‘ஐஸ் பாக்ஸ்ல படுத்திருக்கறவர் ஒரு விரலைத் தூக்கிக் காட்றாரே?’’
‘‘பின்னே... அவர் கிரிக்கெட் அம்பயராச்சே!’’

‘சினிமா பார்க்கறதுக்கு டம்ளர்ல ஏன் பால் எடுத்துக்கிட்டுப் போற?’’
‘‘‘ஆடை’ படம் பார்க்கப் போறேன்!’’

“இலை போட்டாச்சா? இலை போட்டாச்சா?”
‘‘கல்யாண மண்டபத்துக்கு உள்ளேயா, வெளியேவா?!’’

‘‘பாடகர் ஏன் படுக்கை போடறார்?’’
நீலாம்பரி பாடப்போறாராம்!’’

‘‘ராஜா வேஷம் போடுபவர் ஏன் கிரீடத்தோட கிளம்பிட்டார்?’’
‘‘ஹெல்மெட்டைக் காணோமாம்!’’

‘‘கனம் நீதிபதி அவர்களே...’’
‘‘எதிர்க்கட்சி வக்கீல் தோற்றத்தைக் கிண்டல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’

‘‘ஐந்து பேர் சேர்ந்து வீணை வாசிக்கறாங்கன்னு நீங்க சொன்னப்ப இப்படி இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை!

‘‘கச்சேரியை ஏன் பாடகர் பாதியில் நிறுத்திட்டார்?’’
‘‘அடுத்த பாட்டு பூபாளமாம். பொழுதுவிடிஞ்சாத்தான் பாடுவேன்னு அடம் பிடிக்கறாரு!’’

‘‘இளவரசர் ஏன் அடம்பிடிக்கிறார்?’’
‘‘ராஜாவின் கிரீடத்தில்தான் பால் அன்னம் பிசைந்து கொடுக்க வேண்டுமாம்!’’

‘‘அவர் பெரிய புல்லாங்குழல் வித்வானாய் இருக்கலாம். அதுக்காக ஜூஸைக் கூட ஃப்ளூட் வைச்சுதான் உறிஞ்சிக் குடிப்பேன்னு சொல்றதெல்லாம் டூ மச்!’’

கோலன்