குப்பை இல்லாத தீவு!



டென்மார்க்கின் அரணாக அமைந்திருக்கும் பால்டிக் கடலில் அமைதியாக குடிகொண்டிருக்கிறது போர்ன்ஹோம் தீவு. எங்கே பார்த்தாலும் கிரானைட் கற்கள், அழகழகான மலைக்குன்றுகள் என அழகுத் தோட்டமாக காட்சியளிக்கிறது இந்தத் தீவு.
பால் பண்ணை மற்றும் கண்ணாடியிலான கலைப்பொருட்களைத் தயாரிப்பது இங்கு முக்கியத் தொழில். வட்ட வடிவிலான தேவாலயங்கள் இதன் ஸ்பெஷல்.

இங்கே வீற்றிருக்கும் ஓபல் ஏரியைப் பார்வையிடுவதற்காக மட்டுமே தினமும் ஆயிரக்கணக்கானோர் தீவை நோக்கி படையெடுக்கின்றனர். 588 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தத் தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வருடந்தோறும் 6 லட்சம் பேர் தீவைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர். சிலர் நிரந்தரமாகவே அங்கு தங்கிவிடுகின்றனர்.

விஷயம் இதுவல்ல.குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் முனைப்புடன் இயங்கி வருகிறது இந்தத் தீவு. 2032க்குள் ஒரு துளி கூட குப்பையில்லாத தீவாக மிளிரப்போகிறது போர்ன்ஹோம்!