7 தோழிகள் வாங்கிய வீடு!
சீனாவைச் சேர்ந்த ஏழு இணைபிரியாத தோழிகள்தான் அங்கே ஹாட் டாக். இருபது வருடங்களுக்கு முன்பு தோழிகளில் ஒருவர் விளையாட்டாக, ‘‘நாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரே இடத்தில் வசிக்க வேண்டும். அதற்காக ஒரு வீட்டை வாங்க வேண்டும்...’’ என்று சொல்லியிருக்கிறார். அதை மற்றவர்கள் சீரியசாக எடுத்துக்கொண்டு மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்க ஆரம்பித்தார்கள்.
கையில் கணிசமாக ஒரு தொகை சேர, தாங்கள் வசிப்பதற்கு ஏற்ற கனவு வீட்டைத் தேடினார்கள். ஹாங்காங்குக்கு அருகில் அந்த வீடு இருந்தது. ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடி கொண்ட அந்த வீட்டின் மதிப்பு நான்கு கோடி ரூபாய். எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த வீட்டை வாங்கிவிட்டார்கள் தோழிகள். அவர்கள் ஓய்வு பெற இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கின்றன! l
த.சக்திவேல்
|