சிரிங்க பாஸ்!



‘‘படம் எப்ப ரிலீஸ் ஆகும்?’’
‘‘தயாரிப்பாளர் ஜெயில்லயிருந்து ரிலீஸ் ஆனதும்!’’

‘‘ஆடி மாசத்துக்கு வந்த மாப்பிள்ளை ஏன் மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டிருக்காரு?’’
‘‘அவருக்கு ஆடி கார் வேணுமாம்!’’

‘‘காய்கறி மார்க்கெட்ல காளியோட மனைவி பத்ரகாளி மாதிரி கத்தறாளே... என்ன வியாபாரம் செய்யறா?’’
‘‘தக்காளி!’’

‘‘கொட்ற மழைல ஹோட்டலுக்குப் போய் என்ன சாப்பிட்டுட்டு வந்தீங்க?’’
‘‘அடைதான்!’’

‘‘என் மாமியாருக்கு அரசியல்ல இன்ட்ரஸ்ட் இருக்குனு எப்படிக்
கண்டுபிடிச்ச?’’
‘‘கல்யாண சாப்பாட்டுல உப்பு இல்லைனு டைனிங் ஹால்லயிருந்து வெளிநடப்பு செஞ்சிருக்காங்களே..!’’

‘‘பங்களா வாட்ச்மேன் எங்க?’’
‘‘‘கூர்க்கா’ படம் பார்க்கப் போயிருக்கார்!’’

வேமாஜி