வாவ் கனடா!கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம். உலகின் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளது கனடா. ‘‘இது ஒவ்வொரு கனடா குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்...’’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

‘‘பொருளாதாரம், ஆண் - பெண் பாகுபாடில்லாத ஊதியம், சம உரிமை, வேலை வாய்ப்பு, கல்வி, ஊழலற்ற அரசியல், சாலை வசதி, சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு, அமைதியான சூழல் என எல்லாவற்றிலும் மக்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக இருப்பதோடு வாழ்க்கைத் தரத்திலும் சிறந்த நாடாக கனடா விளங்குகிறது.

அகதிகளாக அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அனுசரிப்பதில் கனடாவுக்கு நிகர் கனடாதான். மற்ற மேற்கத்திய நாடுகளில் குடியேறிய அகதிகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் குடியேறிய அகதிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்