இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!மெயிலில் புகைப்படங்களை, ஆடியோ, வீடியோக்களை அப்லோடு செய்ய இனி சில நொடிகள் போதும். செண்ட் பட்டனை அனுப்பியதுமே உரியவருக்கு அது போய்ச் சேர்ந்துவிடும்!இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?கவலையே வேண்டாம். விரைவில் புழக்கத்துக்கு வருகிறது 10Gbps.
யெஸ். 5G!  சமீபத்தில் ‘சாம்சங்’ நிறுவனம் ‘5ஜி’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினாலும் அது பெரிதளவில் சந்தைப்படுத்தப்படவில்லை. காரணம், அது ஒரு பரிசோதனை முயற்சியாகவே இருந்தது.

ஆனால், ‘ஹுவாய்’ நிறுவனம் அதிரடியாக ‘5ஜி’ மோடத்தை களமிறக்கியதோடு ‘5ஜி’ நெட்வொர்க்கில் இயங்கும் ஸ்மார்ட் போனையும் வெளியிட்டுள்ளது. இந்த போனின் ஸ்க்ரீனை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ள முடியும்!ஆனால், வேகம் இப்போதைக்கு 4.6 Gbps மட்டும்தான். விரைவில் 10Gbps இலக்கை அடைவோம் என சத்தியம் செய்கிறார்கள்!

த.சக்திவேல்