கனவுக்கோட்டை



வாழ்க்கையில் எப்படியாவது ஒரு கோட்டையைக் கட்ட வேண்டும் என்பது லெபனானைச் சேர்ந்த சிறுவன் மௌசா அல் மாமரியின் கனவு. வகுப்பறையில் பாடத்தைக் கவனிக்காமல் தன் கனவுக் கோட்டையை வரைவது அவனின் வழக்கம். ஒரு நாள் அது ஆசிரியரின் கண்ணில் பட,  சக மாணவர்களின் முன்பு மௌசா தண்டிக்கப்பட்டான். அத்துடன் ஆசிரியர் அவனின் கனவை உதாசீனப்படுத்தினார்.

எதற்கும் துவண்டு போகாமல் தன் கனவை முப்பது வருடங்களாகப் பின்தொடர்ந்து வந்து தனியாளாகவே ஒரு பிரமாண்டமான கோட்டையைக் கட்டி எழுப்பினார் மௌசா. சுமார் 3,500 சதுர  மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் அக்கோட்டைக்கு ‘மௌசா கோட்டை’ என்று பெயரிட்டு 1969-இல் திறந்தார். இன்று லெபனானின் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் மௌசா கோட்டைக்குத் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.

சக்தி