மனமே கணமும் மறவாதே...நான் கம்பெனியின் முதலாளி வீட்டை அடைந்த போது வழக்கத்திற்கு மாறாக சேட்டின் மனைவி கொண்டு வந்து கீயை கொடுத்தார்.‘’நீங்க போய் திறங்க... அவர் பையனோட வருவார்...’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள்.
நான் சரி ஏதோ வேலை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் எங்களது கம்பெனிக்கு வந்தேன்.ஆபீஸ் பையன் வழக்கம் போல் வந்து நின்று கொண்டிருந்தான்.

பெருக்கிக் கூட்டிப் போகும் பெண்மணியும் காத்திருந்தாள்.லால் ப்ரதர்ஸ் கெமிக்கல்ஸ் ஷட்டர் திறக்கப்பட்டது.நான் உள்ளே போனதும் இருவரும் பின்னால் நுழைந்தார்கள்.சாவியை எப்பொழுதும் போல் சேட்டின் மேஜை கண்ணாடிக்கு உள்ளே இருந்து வெளியில் பார்த்துக் கொண்டிருந்த காசி காமாட்சியின் (அன்னபூரணி) படத்தின் மேல் வைத்தேன்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று சேட்டு அங்கே இருப்பார்.இங்கிருக்கும் நோட்டு, வீட்டில் இருக்கும் இன்னொரு நோட்டு இரண்டும் புதியது. இரண்டையும் அங்கே சன்னதியில் வைத்து எடுத்து வரப்படும். உலகமெங்கும் இருக்கும் மார்வாடிகள் வருவார்கள், தங்கள் தங்களின் கணக்குப் புத்தகங்களை வைத்து எடுத்துச் செல்ல.அதில்தான் புது வருடக் கணக்கு துவங்கும்.

வழக்கம் போல் அவரும் சரியான நேரத்திற்கு வந்து விட்டார். அவருடன் அவர் பையனும் வந்திருந்தான்.அவன் வந்து உள்ளே பார்க்க போய் விட்டான்.நான் கணக்கு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஆரம்பித்து விட்டேன்.ஊதுவத்தியில் சேர்க்கப்படும் வாசனைத் திரவியங்கள் சிறிய பாட்டில்களில் இருக்கும். பிற கெமிக்கல்களும்.

ஆந்திராவில் இருந்தெல்லாம் வந்து வாங்கிச் செல்வார்கள். நூறு ஆண்டுகளைத் தாண்டிய நிறுவனம் எங்களுடையது. எங்கள் நிறுவனமும் ஊதுவத்திகளை ஏழு வாசனைகளில் தயாரிக்கிறது. சேட்டு வீட்டின் மாடியிலேயே பகலில் எப்பொழுதும் பதினைந்து, இருபது பெண்கள் ஊதுவத்தி உருட்டிக் கொண்டிருப்பார்கள்.

இந்தியா தவிர வெளிநாடுகளுக்கு எங்களது ‘டிவைன் மார்னிங்’ ஊதுவத்தி வியாபாரம் ஆகிறது.‘‘வாசு...’’ என்றார் முதலாளி.அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான். நான் இந்தக் கம்பெனியில் முதலில் வேலைக்கு வந்த போது வயது இருபது. அப்பொழுது இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

பின் கம்பெனிக்கு வர ஆரம்பித்தார். அந்த சமயத்தில்தான் சௌகார்பேட்டை பள்ளியொன்றில் தமிழ் டீச்சராக பணி புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியை தீவிரமாக காதலித்து தனது தந்தையின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மதிய நேரங்களில் வீட்டில் இருக்கும் கணக்குப் புத்தகத்தில் கணக்கு எழுத போய் விடுவேன். சில நாட்கள் வகுப்பு இல்லையென்றால் அவரது மனைவி வந்து விடுவார்.உள்ளே அடிக்கடி ‘மனமே கணமும் மறவாதே...’ பாடல் கேட்கும். எங்கள் நிறுவனத்தின் சந்தன ஊதுவத்தியின் வாசமும் வீசிக் கொண்டிருக்கும். எங்கள் கம்பெனியின் சிறப்பான ப்ராடக்டுகளில் அதுவும் ஒன்று. விற்பனையில் முதலிடத்தை அன்றிலிருந்து இன்று வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பழைய நினைவுகளில் இருந்து திரும்பியவனாக ‘‘சொல்லுங்க...’’ என்றேன்.‘‘இன்னையிலிருந்து நம்ம ரெண்டு பேருக்கும் விடுதலை தரப்போறான் என் பையன். அவன் பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறான். அம்பத்தூர்ல ஆட்டோமெடிக் பேக்கிங் ஃபேக்டரி கட்டப்போறானாம். இன்னும் பல மாற்றங்கள் கொண்டு வரப்போறான். கம்பெனிக்கு இந்தத் தலைமுறை பசங்கள் இருபது பேரை வேலைக்கு எடுக்கப்போறான்...” என்றார்.

எனக்கு திக்கென்றது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டுகள். ஓடியே விட்டது. மாதம் எழு நூற்று ஐம்பது ரூபாயில் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்பொழுது மாதம் பன்னிரண்டாயிரம் ரூபாய்.திடீர் என்று வேலையை விட்டு எடுத்து விடப்போகிறான் என்பதை வேறு மாதிரி சொல்கிறார் லால் சேட்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்பொழுதிலிருந்து அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.மதியம் வரை ஒன்றும் புரியவில்லை. நான் வேலையைத் தொடர ஆரம்பித்தேன்.கோடவுனில் ஒரு ஸ்விட்ச் உண்டு. அங்கு ஸ்டாக் பார்க்கும் போது தேவையென்றால் லால் அங்கு இருக்கும் அந்த ஸ்விட்சை அழுத்துவார்.என் முகத்துக்கு நேரே சுவரிலிருக்கும் சீரோ வாட்ஸ் பல்ப் எரியும்.
நான் உடனே எழுந்து போனேன்.

அவர் பையன் சித்தார்த் ‘‘ஜீ... நம்ம ஸ்டாக் நோட்டை கொஞ்சம் எடுத்துட்டு வர்றீங்களா...” என்றார்.நான் உடனே எடுத்துக் கொண்டு போனேன்.அவர் அதை வாங்கிக் கொண்டு ‘‘நீங்க முன்னாடி போங்க... கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சுடுவாங்க இல்லே...” என்று கேட்டார்.
‘‘ஆமாம்...’’ என்றேன்.பின் அவரிடம் ஒவ்வொரு ரேக்கிலும் ஸ்டாக் வைத்திருக்கும் ஒவ்வொரு தட்டிலும் பேப்பருக்கு கீழே  ஸ்டாக்குகளின் மதிப்பு சிறிய காகிதத்தில் எழுதி சொருகப்பட்டிருப்பதை காட்டினேன்.

அவர் சிரித்துக் கொண்டே “இனிமே எல்லாம் ஜிஎஸ்டி தானே?” என்றார்.நானும் ‘‘ஆமாம்...’’ என்று தலையாட்டியபடியே கம்பெனியின் முன்பகுதிக்கு சென்றேன்.மதியம் நான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சில் இருந்த இட்லியும் பொடியும் கூட மறந்து போனது.

எந்த சேமிப்பும் இல்லாமல் இவ்வளவு நாள் வாழ்ந்து விட்டோம் என்கிற சிந்தனையும் தொடர்ந்து பயமும் தொற்றிக் கொண்டது.சேட் மதியம் வழக்கமாக சாப்பாடு முடிந்ததும் வீட்டில் இருக்கும் நோட்டில் கணக்கெழுத என்னை அனுப்புவார். இன்று என்னைப் பார்த்தார்.
‘‘என்ன வாசு சாப்பிடலையா?”‘‘பசிக்கலை...’’ என்றேன்.

அவருக்கும் அவர் பையனுக்கும் சாப்பாடு வந்தது.ஷட்டர் வழக்கமாக அரைமணி நேரம் பாதி இறக்கி வைக்கப்படும்.அன்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.வழக்கமாக அந்த நேரத்தில் கஸ்டமர்களும் வரமாட்டார்கள்.அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் கழித்து சித்தார்த் என்னைக் கூப்பிட்டார்.லால் எழுந்து கோடவுனுக்கு போய் விட்டார்.

‘‘அப்பா சொன்னாரா?”
‘‘சொன்னார்...”‘‘தப்பா எடுத்துக்காதீங்க... கம்பெனியை விரிவுபடுத்தறேன். அப்பாவையும் வீட்ல இனிமே ஓய்வு எடுக்க சொல்லிட்டேன். இவ்வளவு நாள் நீங்களும் உழைச்சது போதும். வீட்ல ஓய்வு எடுங்க...”‘‘இப்படி திடீர்னு சொன்னா எப்படி?”

‘‘உங்க நிலைமை எனக்கு புரியது. ஆன்லைன் பிசினஸை இன்னும் விரிவு படுத்தணும்னு நினைக்கறேன். அதனாலதான் இந்த முடிவு. உங்களுக்கு ரெண்டு மாச சம்பளம் கொடுத்துடறேன். உள்ளே பார்த்தேன். கோடவுன் கணக்கெல்லாம் சின்சியரா வச்சுருக்கீங்க. உங்களை தொடர்ந்து வச்சுக்கலாம்தான். அப்பாவோட வேலையாளா இல்லாம நண்பர் மாதிரி பழகிட்டு இருந்திருக்கீங்க. உங்களை நான் கடுமையா நடத்தவும் முடியாது. அதனாலதான் இந்த முடிவை எடுத்தேன்...’’

நான் எனது சீட்டில் போய் உட்கார்ந்த போது எனது கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்து விழுந்தது.எடுத்துப் பார்த்தேன். எனது வங்கிக் கணக்கில் லால் ப்ரதர்ஸ் கணக்கில் இருந்து இருபத்து நாலாயிரம் விழுந்திருந்தது.மாலையில் லாலிடம் சொல்லிவிட்டு கிளம்பும் போது அவனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு கிளம்புவதற்கு முன் கைப்பேசியை அவனிடம் நீட்டினேன்.

‘‘வேண்டாம், நீங்களே வெச்சுக்கங்க...”‘‘நான் யாருக்கப்பா போன் பண்றேன்... கம்பெனிக்கு அப்பாவுக்கு என்னைக்காவது பண்ணுவேன்... அதுவும் எமர்ஜென்சின்னாதான் பண்ணுவேன்...”‘‘வேண்டாம் வெச்சுக்கங்க... சாமி பாட்டெல்லாம் வச்சிருப்பீங்க...”
நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.

எங்கள் கம்பெனி வாசலில் ஓர் அரச மரம் உண்டு. அதை நிமிர்ந்து பார்த்தேன். அதில் புதியதாய் இலைகள் முளைத்திருந்தன. கீழே காய்ந்த சருகுகள்.இரவில் வெகு நேரம் உறக்கம் வரவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லை. கைக்கெட்டிய தூரத்திலிருந்த கைப்பேசியை எடுத்து உள்ளே மியூசிக் பகுதிக்கு சென்றேன்.ஆபேரி ராகத்தில் அமைந்திருந்த அந்தப்பாடல்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி சாவித்திரியாக நடித்திருந்த அந்தப்பாடல், ‘மனமே கணமும் மறாவாதே...’ என இருளில் பரவி என் காதுகளில் ஒலித்தது.
மனமெங்கும் மழைபொழிவதைப் போலிருந்தது. மகிழ்ந்தேன்.

சமந்தாவால் ஆந்திராவில் அடிதடி!

சமந்தாவால் ஆந்திர மீடியா இரண்டுபட்டுக் கிடக்கிறது!வெளியாக இருக்கும் தனது ‘ஓ... பேபி’ தெலுங்குப் படம் வெற்றி அடைய வேண்டும் என திருப்பதிக்கு அவர் சென்று பெருமாளை வணங்கினார்.பின்னர் தனது கெஸ்ட் அவுஸுக்கு செல்லும் வழியில் தன் கழுத்தில் இருந்த சங்கிலியை ரவிக்கைக்குள் திணித்தார்.

இந்தக் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட... அது அப்படியே தெலுங்கு யூ டியூப் சேனல்களில் வைரலாகி விட்டது.‘‘அந்த செயின் தாலியா அல்லது வெறும் செயின்தானா..?’’ என்பதுதான் அவர்களது விவாதப் பொருள். ‘இதெல்லாம் ஜர்னலிசம் இல்ல... யூ டியூப் சேனல்ஸ் நம்ம மானத்தை வாங்குது...’ என தெலுங்கு பத்திரிகைகள் கொதிக்கின்றன!

ரிலாக்ஸுக்கு மாலத்தீவு!

விஆர்எஸ் வாங்க இருந்த த்ரிஷா, மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். காரணம், ‘96’ படத்தின் மெகா ஹிட்.போதாதா? வரிசையாக இப்போது ஐந்து படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.இதை ஒட்டி ரிலாக்ஸ் ஆக சில நாட்கள் விடுமுறை கொண்டாட நினைத்தவர், இம்முறை மாலத்தீவு சென்றிருக்கிறார்.அங்கு, தன்னைத்தானே  எடுக்கும் போட்டோஸை இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதித்து வருகிறார்.ஆர்ட்டின்ஸும் லைக்ஸும் பறக்கின்றன!

சுப்ரஜா