SHEROSHIMA!
ரீடர்ஸ் வாய்ஸ்
 விஜய்யின் ‘பிகில்’ படத் தகவல்கள் ஒவ்வொன்றும் செம ஹாட். - கொ.சி.சேகர், பெங்களூரு; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; சரண் சுதாகர், வேளச்சேரி; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; சம்யுக்தா சுதாகர், மடிப்பாக்கம்; ஜெர்லின், ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை.
‘புதிய கல்விக்கொள்கை... புது நுழைவுத்தேர்வு... புது அபாயம்!’ - பெற்றோர்களின் மனதில் பீதியைக் கிளப்பியுள்ளது. - பிரேமா குரு, சென்னை; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கோவிந்த்ராஜ், தில்லை கங்காநகர்; ஆர்.ஜெ.சி, சென்னை; முரளி, நங்கநல்லூர்; தெய்வசிகாமணி, வேளச்சேரி; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்; சாய்கவின், பொள்ளாச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
ஜப்பானின் ‘HE’ROSHIMA நகரை கலங்கடித்த, இந்திய ஹாக்கி அணியின் ‘SHE’ROSHIMAக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். - செம்மொழி, சேலையூர்; கைவல்லியம், மானகிரி; பிரேமா குரு, சென்னை; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; சந்திரமதி, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்ச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்கிற ரீதியில் மத்திய அரசு பயணப்படுவதைப் பார்த்தால் ஒரே கட்சி, ஒரே தலைவன் என்று வலியுறுத்தப்போவது போல தோன்றுகிறது. - சரண் சுதாகர், வேளச்சேரி; ஆத்மநாதன், ஆற்காடு; அழகுமங்கை, அடையாறு; கருணாகரன், போரூர்; இலக்சித், மடிப்பாக்கம்; சந்திரமதி,சென்னை; ப.மூர்த்தி, பெங்களூரு.
அம்மா உணவகங்கள் ‘சும்மா’வாகிப் போனதற்குக் காரணமானவர்களை நன்கு அடையாளப்படுத்தியுள்ளீர்கள். - சம்யுக்தா சுதாகர், மடிப்பாக்கம்; ப.மூர்த்தி, பெங்களூரு; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; பி.சாந்தா, மதுரை; பிரேமா குரு, சென்னை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.
கால்பந்து நடுவரான இஸ்லாமிய பெண் பற்றி படித்தது சிறப்பு. - எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; நிலவழகு, நீலாங்கரை; கவுரிநாத், பரங்கிமலை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; ஜெர்லின்,ஆலந்தூர்.
மங்கோலியாவில் இருந்து லண்டனுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த பைகல்மா நோர்ஜ்மா, ஒட்ட ‘கம்’ இல்லாமலேயே மனதில் ‘பச்’ என்று ஒட்டிக்கொண்டார். - க.நஞ்சையன், பொள்ளாச்சி; மனோகர், மேட்டுப்பாளையம்; அமிர்பத்ரா, சென்னை; கைவல்லியம், மானகிரி; அ.யாழினி பர்வதம், சென்னை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு.
நாம் சுற்றுலா எனும் பெயரில் மலைப்பிரதேசங்களை மாசுபடுத்தும் அவலத்தை ‘சொர்க்கம் அல்ல... நரகம்’ கட்டுரை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. - சங்கீத சரவணன், மயிலாடுதுறை; பி.சாந்தா, மதுரை; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
|