அஞ்சு பன்ச் - வடிவேலு



*ரஜினிகாந்த் தனக்குப் பரிசாகக் கொடுத்த விவேகானந்தர் புத்தகங்களை அடிக்கடி எடுத்துப் படிப்பார்.

*மறைந்த டிஎம்எஸ் பாடல்களுக்கு வடிவேலு அடிமை. மனப்பாடமாக அவர் பாடல்களை
ராகத்தோடு பாடுவார்.

*ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. கவனித்துப்பார்த்தால் வியாழன் மஞ்சள் சட்டையும், வெள்ளி அரக்கு சட்டையும், சனிக்
கிழமை கருப்புச்சட்டையும போடுவார்.

*மதுரைக்குப் போனால் கண்மாய் மீன்களை அப்படியே கொண்டுவரச் செய்து சமைத்துச் சாப்பிடுவதில் ரொம்பவும் பிரியம்.

*விதவிதமான வாட்ச் அணிவதில் விருப்பம் உண்டு. ரயில் பயணம்தான் பிடிக்கும். ‘விமானத்தில் கட்டிப்போட்ட மாதிரி இருக்கு’ என்பது அவர் ஆதங்கம்.

நன்மதி