தோனி ரகசியம்!
‘‘முதல் முறையாக ஒரு ரகசியத்தை சொல்லப் போகிறேன்.சிறு வயதில் ஏராளமான ஓவியங்களை வரைவேன். வளர்ந்தபிறகு ஓவியனாக வேண்டும் என்றே விரும்பினேன்.ஆனால், ஓவியம் போலவே சிறு வயது முதல் எனக்கு விருப்பமாக இருந்த கிரிக்கெட்டில் இன்று முழுநேரமும் ஈடுபடுகிறேன். இதனால் எனது ஓவியனாகும் கனவு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
விரைவில் இதற்கு உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்!ஆம். சிறு வயதில் நான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி ஒன்றை அமைக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால், உடனடியாக அல்ல. அதற்கு சில காலம் செல்ல வேண்டும்!
ஓவியத் திறமையுள்ள என் ரசிகர்கள் என் ஓவியங்களைப் பார்த்து கருத்து தெரிவித்தால் குறைகளை சரிசெய்துகொள்ள எனக்கு வழி கிடைக்கும்...’’ - இப்படி தனது சிறு வயது ஓவியங்களைக் காட்டியபடியே வீடியோவில் பேசி சமீபத்தில் பதிவேற்றியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரரான தோனி!
காம்ஸ் பாப்பா
|