நீச்சல் மன்னன்



சீனாவைச் சேர்ந்த  ஷு பிவுவின் வயது 53. அவர் வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்துக்கு பேருந்து அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமானால் 15 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நதியின் வழியாகச் சென்றால் இரண்டே கிலோ மீட்டர்தான்.

இளம் வயதில் பிவு சாப்பாட்டு ராமனாக இருந்தார். அப்போது அவரின் உடல் எடை 100 கிலோ. அத்துடன் சர்க்கரை நோயும் அவரை படாதபாடு படுத்தியது. மருத்துவர்கள் அவரைத் தினமும் நடக்கச் சொன்னார்கள். நீச்சல் அடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நண்பர்கள் ஆலோசனை தந்தனர்.

நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள நீச்சல் அடிக்கத் தொடங்கியவர் இன்று உலகம் முழுவதும் தெரியும் ஒரு நபராக மாறிவிட்டார்!ஆம்; தினமும் பிவு அந்த நதியில் நீச்சல் அடித்துதான் அலுவலகத்துக்குச் செல்கிறார். கடந்த 11 வருடங்களாக அவர் இப்படிச் செய்து வருகிறார்! l

த.சக்திவேல்