Shower... Power... ADDICTION!



நிக்கி ரொம்ப லக்கி. ‘கீ’ அள்ளித் தந்த ஹார்ட்டீன் லைக்ஸால் ஃப்ரெஷ் புன்னகையில் பளபளக்குது இந்த பெங்களூரு கஸாட்டா. ‘‘ஃபேஷன் டிசைனிங்ல பெரிய ஆளா வருவேன்னு நினைச்சிருந்தேன். ஆனா, இப்ப ஆக்ட்ரஸா சக்சஸ்ஃபுல்லா உங்க முன்னாடி நிற்கறேன். ஆச்சரியமா இருக்கு.

படிச்சது, வளர்ந்ததெல்லாம் பெங்களூருலதான். அப்பா, அம்மாவுக்கு நான் டாக்டராகணும்னு ஆசை. ஆனா, எனக்கு ஊசி, பிளட்னாலே உடம்பெல்லாம் கிடுகிடுக்கும். அதனால மெடிசின் புடிக்கல. படிக்கல. ஃபேஷன் டிசைனிங் பக்கம் தாவிட்டேன். அக்கா சஞ்சனா மாதிரி நானும் ஆக்ட்டிங் பக்கம் போவேன்னு எங்க வீட்ல எல்லாருமே நினைச்சிருந்தாங்க. உண்மையை சொல்லணும்னா, நான் அக்கா கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கோ, மூவி ஃபங்ஷனுக்கோ வேடிக்கை பார்க்கக் கூட போனதில்ல.

காலேஜ் டைம்ல மிராக்கிள் நடந்தது. விளம்பரப் பட ஆஃபர் வந்தது. மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ணித்தான் பார்க்கலாமேனு தோணுச்சு. களத்துல இறங்கினேன். அதுவே க்ளிக் ஆகிடுச்சு. தொடர்ந்து நிறைய விளம்பர படங்கள் பண்ணினேன்.

அப்பதான் மல்லுவுட்ல இருந்து நடிக்க ஆஃபர் வந்தது. ‘1983’னு மலையாளத்துல ஒரு படம் பண்ணினேன். அதுல ஸ்கூல் பொண்ணு லுக்ல இருக்கற ஒரு போஸ்டர்தான் இப்ப வரை என் ஃபேவரிட் போட்டோ. அடுத்து கன்னடத்துல ஒரு படம் கிடைச்சது. அங்கேயும் அறிமுகமானேன். அது தமிழ் ‘பையா’வோட ரீமேக். அதுவும் ஹிட். அப்புறம் ‘யாகாவாராயினும் நா காக்க’ மூலம் தமிழுக்கும் வந்துட்டேன்...’’ புன்னகைக்கிறார் நிக்கி.
உங்க அக்கா சஞ்சனா கல்ராணி எப்படி இருக்காங்க?

சூப்பரா! யோகாவிலும் கலக்கறாங்க. அவங்க எந்த இண்டஸ்ட்ரில ஒர்க் பண்ணினாலும் தி பெஸ்ட்டா ஒர்க் பண்ணுவாங்க. நான் கோலிவுட்ல பிசியா இருப்பதைப் பார்த்து அவங்க சந்தோஷப்படறாங்க. தமிழ்ல நல்ல ஆஃபர்ஸ் அமைஞ்சா, அவங்களும் என்னோட சேர்ந்து நடிக்க ரெடியா இருப்பாங்க.
எப்பவாவது ரூல்ஸை மீறினதுண்டா?

சில நேரங்கள்ல! சிக்னல்ல skip ஆகியிருப்பேன். வேணும்னு அப்படி பண்ணினதில்ல.
திடீர்னு யார் கண்ணுக்கும் புலப்படாமப் போயிட்டா என்ன பண்ணுவீங்க?

ஐ ஜாலி! வேர்ல்டு டூர் அடிப்பேன். பாஸ்போர்ட், விசா, ஃபிளைட்னு எந்த தொல்லையும் இல்லாம ஜாலியா சுத்துவேன்.
எதுக்கு நீங்க அடிக்‌ஷன் ஆகியிருக்கீங்க?

என்னோட petsகிட்ட. பெங்களூர் வீட்ல ரெண்டு நாய்க்குட்டிகள் வளர்க்கறேன். அவங்க அன்புக்கு எப்பவும் நான் அடிமை.
உங்க கலெக்‌ஷன்ஸ் சீக்ரெட் சொல்லுங்க?கிரீட்டிங் கார்ட்ஸ். என்னோட ஸ்கூல் டேஸ்ல இருந்து இப்ப வரை உள்ள அத்தனை கிரீட்டிங் கார்ட்ஸும் சேர்த்து வச்சிருக்கேன். வீட்ல எனக்குனு ஒரு ஸ்பெஷல் ரூம் இருக்கு. அதுல கார்ட்ஸ் மாதிரியே சாஃப்ட் டாய்ஸ் கலெக்‌ஷனும் இருக்கு.
ஒரு சூப்பர் பவர் உங்களுக்கு கிடைக்கும்னா... என்ன பவர் கேட்பீங்க?

‘எவ்ளோ வேணா சாப்பிடலாம். ஆனா, ரொம்ப ஸ்லிம்மாவே இருப்பேன்’ என்கிற ஒரே ஒரு சூப்பர் பவர் கிடைச்சா ரியலி ஹேப்பி! வேற எந்த பவரும் வேணவே வேணாம். ஏன்னா, நான் foodie. நிறைய சாப்பிட்டா எங்க குண்டாகிடுவோமோனு பயப்படறேன்! ஹெல்த்தியா, ரசனையா சாப்பிடணும்னு நினைப்பேன். ஆனா அப்புறம் ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணணுமேன்னு நினைப்பேன்! பிறகென்ன... விருப்பப்பட்டதை ஏக்கத்தோடு சாப்பிடாம விட்டுடுவேன்!

ஷவர்ல குளிக்கும் போது என்ன பாட்டு பாடுவீங்க?
நிறைய... நிறைய... பாடுவேன். டெய்லி ஸாங்ஸ் மாறிட்டே இருக்கும். ஹேப்பி மூட்ல ‘சின்ன மச்சான்...’, ‘ரவுடி பேபி...’னு பாடல்கள் பறக்கும்.  
‘கீ’ ரிலீஸ் தாமதம் பத்தி டுவிட்டர்ல நிறைய ட்ரோல்ஸ் வந்ததே..?பார்த்தேன். கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்துச்சு. சோஷியல் மீடியால போட்டோஸ் போஸ்ட் பண்ணவே பயமா இருக்கு. கடந்த மூணு வருஷங்களா ‘கீ’ ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு சில சூழல்களால் வெளியாகாமப் போச்சு.

கலாய்க்கறது, ட்ரோல் பண்றதை தப்புனு சொல்ல வரல. ஆடியன்ஸும் படத்தை ஆவலா எதிர்பார்த்திருப்பாங்க. ஆனா, ஒரு படத்தை தாமதப்படுத்தணும்னு நினைச்சு யாரும் ரிலீஸ் பண்ணாம இருக்கறதில்ல...ஆக்சுவலா பல தடைகள், போராட்டங்களைக் கடந்து ரிலீஸ் வரை ஒரு படம் வருவதே கடவுள் அருள்தான். ஆக்டர்ஸான நாங்க ஒரு படத்துல நடிச்சு முடிச்சதும் வேறொரு படத்துல கமிட் ஆகிடுவோம்.

ஆனா, இயக்குநர்கள் நிலமை அப்படியில்ல. முதல் படம் ரிலீஸ் ஆனாத்தான் அவங்களுக்கு லைஃப். ஒரு கதையை வருஷக்கணக்கா உருவாக்கி, செதுக்கி, ஸ்கிரிப்ட்டாக்கி, தயாரிப்பாளரைத் தேடி அலைஞ்சு, ஒரு டைரக்டர் படம் பண்ணுவதே கிட்டத்தட்ட அட்வென்ச்சர்தான்.
ஷூட் முடிஞ்சதும் நடிகர்கள் வேலை முடிஞ்சுது. ஆனா, இயக்குநருக்கு அதுக்குப் பிறகுதான் இன்னொரு பிறப்பே இருக்கு! எடிட்டிங், மிக்ஸிங், ஆர்ஆர்னு அத்தனை ஒர்க்கிலும் கவனம் செலுத்தி மாசக்ககணக்குல உழைக்கணும்.

‘கீ’ அப்படித்தான். ஜீவாவுக்கோ எனக்கோ அது முதல் படம் இல்ல. ஆனா, டைரக்டர் காளீஸுக்கு அதுதான் முதல் படம். அதனாலயே ‘கீ’ ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதலுக்கு பலன் கிடைச்சிருக்கு. இப்ப படம் நல்லா ரீச் ஆகியிருக்கு!

மை.பாரதிராஜா