நா வறண்டது!



அட்டையில் தல -தளபதியை இணைத்த ‘குங்குமத்’திற்கு இரு தரப்பு ரசிகர்களும் ஒருமித்த குரலால் சொல்வது, ‘செம’.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; சாய்கவின், பொள்ளாச்சி; மனோகர், சென்னை;
கருணாகரன், சென்னை.

இருந்தபோதும் பரபரப்பு, இறந்தபின்னும் பரபரப்பு என்பது ஜெயலலிதா என்கிற பிரமாண்டமான பர்சானலிட்டிக்கே உரியது என்பது அவருடைய சொத்துகள் படும்பாட்டை படித்தபோது தெரிந்தது.
- ஆத்மநாதன், ஆற்காடு; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; இலக்சித், மடிப்பாக்கம்; ஜெயசந்திர பாபு, சென்னை; பிரேமா பாபு, சென்னை.
 
நாயக, நாயகிகளுக்குப் பஞ்சமில்லை, திறமையான இயக்குனர்களும் கொஞ்சமில்லை, இசை அமைப்போர் மற்றும் கேமராமேன்களோ எக்கச்சக்கம்... என்று கூறுகிற ‘தமிழ் சினிமா வெர்ஷன் 2.0’ கட்டுரை படு ‘இன்ட்ரஸ்டிங்’.
- முரளி, நங்கநல்லூர்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; மயிலை.கோபி, திருவாரூர்; பிரேமா பாபு, சென்னை; த.நரசிம்மராஜ், மதுரை; இலக்சித், மடிப்பாக்கம்.

ராகுல் தாத்தா (எ) தனபால் (எ) உதயபாலனுக்கு கோகுல் டீம் கொடுத்துள்ள ‘கெட் அப்’ அவரின் முதுமைக்கு ‘கெட் அவுட்’.
- அமிர் பத்ரா, சென்னை; சந்திரமதி, சென்னை; தெய்வசிகாமணி, வேளச்சேரி; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு.

அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளின் எண்ணெய் அரசியல் கொதிநிலைக்கு வந்துவிட்டது. இதில் இந்தியா தீயாமல் இருக்க பார்த்துக்கொள்வது மத்திய அரசின் கடமை.
- சந்திரமதி, சென்னை; அமிர்பத்ரா, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; முரளி, சென்னை; கருணாகரன், போரூர்.

தண்ணீர் நெருக்கடி அதிகமுள்ள நாடாக இந்தியா மாறப்போகிறது என்பதை ஆதாரபூர்வ தகவல்களுடன் விவரித்த கட்டுரையைப் படித்த அதிர்ச்சியால் ‘நா’ வறண்டு போனது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சரண் சுதாகர், வேளச்சேரி; செம்மொழி, சேலையூர்; நிலவழகு, நீலாங்கரை; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; கோவிந்தராஜ்; தில்லை கங்கா நகர்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; நஞ்சையன், பொள்ளாச்சி; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ரவிக்குமார், பொள்ளாச்சி.

132 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன காரை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பது புதுமை.
- ப.மூர்த்தி, பெங்களூரு; செம்மொழி, சேலையூர்; மயிலை.கோபி, திருவாரூர்.

ரீடர்ஸ் வாய்ஸ்