அஞ்சு பன்ச்-செல்வராகவன்*வருடம் ஒரு முறையாவது பண்ணைபுரம் போய் குலதெய்வத்திற்கு மரியாதை செய்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வருவார். அன்று பழைய நண்பர்களோடு சந்திப்பும் உண்டு.

*எஞ்சினியரிங்கில் கோல்ட் மெடலிஸ்ட். சினிமாவில் ஆர்வம் மறைமுகமாக இருந்தாலும், அப்பாவின் தூண்டுதலால் மட்டுமே சினிமாவிற்கு வந்தவர். அதே சமயம் ஆங்கில இலக்கியத்தில் அத்துப்படி

*இப்போது தீவிர உடற்பயிற்சி செய்து, உடம்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். காலையில் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி கண்டிப்பாக உண்டு.

*சினிமா நேரம் போக வீட்டில் மகள் லீலாவதியோடு நேரம் செலவிடுவார். காத்திருந்து ஸ்கூலிலிருந்து மகளை அழைத்துவர பிரியப்படுவார்.

*மாதம் ஒரு தடவை அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா, தம்பி தனுஷ் சகிதம் சகோதரிகள், மாப்பிள்ளைகளுடன் சந்திப்பு உண்டு. சமயங்களில் அதில் திடீர் விசிட்டராக ரஜினியும் வருவார்.

நன்மதி