சவுக்கடி!உக்ரைன் நாட்டில் காமெடி செய்தவர் அதிபராகிறார். இங்கே பிரதமராகி காமெடி செய்கிறார்கள்!
- மாணிக்கவாசகம், கும்பகோணம்; இலக்சித், மடிப்பாக்கம்; மனோகர், சென்னை; யாழினி பர்வதம், சென்னை; பிரேமா, திருநெல்வேலி; சந்திரமதி, சென்னை.

இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளில் பயங்கரவாதிகளால் இலங்கையில் பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை நெஞ்சை கனக்கச் செய்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; காந்தி லெனின், திருச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; இலக்சித், மடிப்பாக்கம்.

பணக்கட்டுகளின் கீழே சவமாகி புதையுண்டு போன சனநாயக சீரழிவைப் பற்றிய கட்டுரை, கை நீட்டுகிற வாக்காளர்களுக்குச் சவுக்கடி.
- பிரேமா பாபு, சென்னை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஜெரிக், கதிர்வேடு; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; நஞ்சையன், பொள்ளாச்சி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; கைவல்லியம், மானகிரி.

நகைச்சுவை நாயகனாக, கோடீஸ்வரனாக வாழ்ந்த சந்திரபாபுவை மாடி வீட்டு ஏழையாக்கி வறுமையில் தள்ளிய சம்பவங்களின் ‘போஸ்ட் மார்ட்டம்’ ரிப்போர்ட் வரவேற்கத்தக்க முயற்சி.
- ஆத்மநாதன், ஆற்காடு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா பாபு, சென்னை; ஜெரிக், கதிர்வேடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; பாபு, அசோக் நகர்; ப.மூர்த்தி, பெங்களூரு.

ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது போல, ஆறு லட்ச மரங்களை நட்டு சாதனை புரிந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நாயரின் பிறந்த நாளை வனநாளாகக் கொண்டாட முயற்சி எடுக்க வேண்டும்.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; ரவிக்
குமார், பொள்ளாச்சி.

‘க்ளாடியேட்டர் ஸ்லிப்பர்ஸு’ம், டிசைனர் யோகா கந்தசாமி பேட்டியும் அருமை; புதுமை.
- கைவல்லியம், மானகிரி; மனோகர், மேட்டுப்பாளையம்; யாழினி பர்வதம், சென்னை; சரண் சுதாகர், சென்னை.

டைஜஸ்ட்டுக்கு ஒத்துழைக்கிற அயிட்டங்களை ‘ஜஸ்ட்’ ஆறே பக்கங்களில் படங்களோடு அடக்கித் தந்த குங்குமத்திற்கு ஹேட்ஸ் ஆஃப்!
- மாளவிகா ரமேஷ், மாம்பலம்; கைவல்லியம், மானகிரி; மகேஸ்வரி, பொள்ளாச்சி; பிரேமா, சென்னை.

‘ராஜராஜ சோழனுக்கு என்ன ஆச்சு?’ கட்டுரை ஒரு வரலாற்று நாவலைப் படித்த பிரமிப்பைக் கொடுத்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; ஆர்.ஜெ.சி, சென்னை.
 
ரீடர்ஸ் வாய்ஸ்