சம்மரை சமாளிக்க சாய் தன்ஷிகா டிப்ஸ்!



இங்கே பிரைடல் கலெக்‌ஷன்ஸ் போட்டோஷூட்டில் ஜொலிக்கும் சாய் தன்ஷிகாவிடம் பேசினாலே அது கோடை கொண்டாட்டம்தான்! அப்படி ஒரு ஃப்ரெண்ட்லி பென்குயின். முன்பு 360 டிகிரியில் சிலம்பம், பைக் ரைடிங்... என ஸ்போர்ட்ஸில் துள்ளிக் கொண்டிருந்தவர், இப்போது நடித்து வரும் ‘யோகி டா’வில் ஃபைட், சேஸிங் என அதிரடி ஆக்‌ஷன் குயினாக அசத்துகிறார். கோவையில் அதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்து வந்தவரிடம், ‘சம்மரை எப்படி சமாளிக்கிறீங்க?’ எனக் கேட்டால், மலர்கிறது முகம்.

‘‘சம்மர்னாலே அத்தனை பேருமே அலறுவாங்க. ஆனா, ஏப்ரல், மே வந்தாலே நான் குஷியாகிடுவேன்! முன்னாடியெல்லாம் வெகேஷன் கிடைக்கும். ஸோ, டூர் அடிப்பேன். இப்ப ஷூட்டிங்... ஷூட்டிங்!வெயிலை எப்படியும் சமாளிச்சிடலாம். குளிர் சீஸனை மேனேஜ் பண்ணத்தான் கிறுகிறுக்கும்! என்னால ரொம்பவும் குளிர் தாங்க முடியாது. வெடவெடத்திடுவேன்.

இப்ப ‘யோகி டா’வுக்காக கோயமுத்தூர் ஷூட் போயிட்டு வந்தேன். அங்கயும் நம்ம சென்னை ஹாட்தான் தகதகத்தது. ஜில்லுனு வெள்ளரிக்கா ஜூஸ், இளநீர்னு குடிச்சுத்தான் வெயிலை டீல் பண்ணினோம். இந்த மாதிரி டைம்ல நம்ம ஸ்கின்னை பாதுகாப்பா வச்சுக்கறது ஒரு சவால்...’’ கலகலக்கிறார் தன்ஷி.ஆக்‌ஷன் ஹீரோயினாகிட்டீங்க..?

ஆமாங்க. ‘யோகி டா’வுல நல்ல கதை அமைஞ்சது. ஒரு பெண்ணால், இந்த சமூகத்தின் சூழல்களை எப்படியெல்லாம் எதிர்கொள்ள முடியுது என்பதுதான் படத்தின் ஒன்லைன். கௌதம் கிருஷ்ணா இயக்கறார். என் அங்கிள் அருணகிரி, அவரது நண்பர் ராஜ்குமார் ரெண்டு பேரும் தயாரிக்கறாங்க. ரொம்பவும் தைரியமான பொண்ணா வர்றேன்.

ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிஸிக்கல் டிரெயினிங் நிறைய பண்ணினேன். கணேஷ் மாஸ்டர் ஸ்டண்ட்ஸ் அமைக்கறார். இதுவரைக்கும் அஞ்சு ஃபைட்ஸ் எடுத்து முடிச்சிருக்கோம். எண்பது சதவிகிதம் படப்பிடிப்பு முடிச்சுட்டோம். இன்னும் ஒரு ஃபைட் பேலன்ஸ் இருக்குனு சொல்லியிருக்காங்க.

அப்புறம் சுந்தர்.சி சார் நடிப்பில் ‘இருட்டு’னு ஒரு படமும் நடிச்சு முடிச்சிருக்கேன். உங்க வாய்ஸ் ரொம்ப ‘யூனிக்’கா இருக்கே..?தேங்க்ஸ். இதை நிறைய பேர் சொல்லியிருக்காங்க. என் வாய்ஸ் மத்தவங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ... என் குரல்ல எப்பவும் பேச நான் தயங்கினதில்ல. ‘உங்க வாய்ஸ் நல்லா இருக்கு. நீங்க பாடலாமே’னு கூட கேட்டிருக்காங்க. ஒரு படத்துல பாடறதுக்கான வாய்ப்பும் வந்தது. ஆனா, அது மிஸ் ஆகிடுச்சு. எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.உங்க படங்கள் சரியா போகாத போது உங்க மனநிலை எப்படியிருக்கும்?

முதல்படம் ‘பேராண்மை’யிலிருந்து இப்ப வரை சக்சஸ், ஃபெயிலியர் ரெண்டையுமே ஒரே மாதிரிதான் பார்க்கறேன். எதையுமே மைண்ட்ல ஏத்திக்க மாட்டேன். சினிமால ஒவ்வொரு விஷயமும் நமக்கு லேர்னிங் பிராசஸ்தான். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவம். அதுலதான் கத்துக்க முடியும். ஸோ, எல்லாத்தையுமே என் வளர்ச்சிக்கானதா பார்க்கறேன்.  

கமர்ஷியல் படங்கள் பண்றது ஈஸியான வேலைதானே..?

இல்லீங்க. யதார்த்த படங்கள் பண்றதை விட, கமர்ஷியல் பண்ணும்போது அதைவிட டபுள் மடங்கு ஒர்க் பண்ணவேண்டியிருக்கு. ஆரம்பத்துல நான்கூட அப்படித்தான் நினைச்சிருந்தேன். கமர்ஷியல்னா கன்டன்ட்டுக்கு மெனக்கெட வேண்டாம்... என்டர்டெயின்மென்ட் மட்டும் பண்ணினா போதுமானதுனு நினைச்சிருந்தேன்.

மரத்தை சுத்தி டூயட் பாடறதுதானேனு எளிதா சொல்லிட முடியும். ஆனா, அப்படிப் படங்கள் பண்ணும்போதுதான், அது எவ்ளோ சிரமமானதுனு புரிஞ்சுக்கிட்டேன்.  கமர்ஷியல்னாலும் கூட அதில் கன்டன்ட் அவசியம். வெரைட்டி இருக்கணும். ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகா தெரிஞ்சாகணும்... இப்படி ரொம்பவே ஒர்க் பண்ண வேண்டியிருக்கு. ரியாலிட்டி ஒரு பக்கம் கஷ்டம்னா கமர்ஷியலும் கஷ்டமானதுதான்!  

மை.பாரதிராஜா