COFFEE TABLE



கட்டை ரேட்டு... ஒயர்லெஸ் ஸ்பீக்கரு!

மலிவு விலையில் ஒயர்லெஸ் ஸ்பீக்கரைச் சந்தையில் இறக்கியுள்ளது ‘சவுண்ட் ஒன்’ நிறுவனம். ஸ்பீக்கருக்குக் கைப்பிடி இருப்பதால் சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போக முடியும். தூசு மற்றும் தண்ணீர் புகாத பாதுகாப்பு, 10 வாட்ஸ் அவுட்புட் சவுண்ட், புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதி, 649 கிராம் எடை என அசத்துகிறது இந்த ஸ்பீக்கர். 2000mAh திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் எட்டு மணி நேரத்துக்குக் கவலையில்லை. விலை ரூ.3,490.

தத்து பித்து

தானும் ஒரு தத்துவவாதி என நிரூபித்திருக்கிறார் ரெஜினா. சடசடக்கும் அருவியிலிருந்து கொட்டும் நீரை எதிர்த்து ஒரு சிறுமரத்துண்டு போராடும் வீடியோவை நாம் பார்த்திருப்போம். ‘வாழ்க்கையோடு நானும் இப்படித்தான்’ என்பதை சிம்பாலிக்காக சொல்ல, அந்த வீடியோவின் மீது ‘life & me’ என்று எடிட் செய்து இன்ஸ்டாவில் தட்டிவிட்டிருக்கிறார். அப்புறமென்ன... லைக்குகளுடன், ‘same to you’, ‘90 சதவிகிதம் மக்கள் பிரச்னைகளோடுதான் இருக்காங்க... அதை தைரியமா எதிர்கொள்ளணும்...’ போன்ற கமென்ட்டுகள் குவிகின்றன.

நோ ஸுகர்

‘‘சர்க்கரை இல்லாமல் தேநீரை ருசிக்க வேண்டும். அதுதான் உடல் நலத்துக்கு நல்லது...’’ என்று அடித்துச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு. ‘‘இதுவரைக்கும் சர்க்கரை இல்லாமல் தேநீரை அருந்தியதே இல்லை...’’ என்று சொன்ன 64 பேரை ஓர் அறையில் அடைத்து வைத்து அவர்களுக்குச் சர்க்கரை இல்லாத தேநீரை ஒரு வாரத்துக்குக் கொடுத்துள்ளனர்.

எட்டாவது நாளில் சர்க்கரை கலந்த தேநீரைக் கொடுக்கும்போது, 42 பேர் சர்க்கரை இல்லாத தேநீரையே விரும்பிக் கேட்டிருக்கின்றனர். இனிமேல் சர்க்கரை இல்லாத தேநீரையே குடிக்கப் போவதாக அந்த 42 பேரும் சபதம் எடுத்திருக்கின்றனர். ஒரு வாரத்தில் இவ்வளவு பேர் சர்க்கரைக்கு ‘நோ’ சொல்லியதுதான் இதில் ஹைலைட்.

பப்ஜி டைவர்ஸ்!

திருமணமான அடுத்த நாளே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்துக்குச் செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. விவாகரத்துக்கான காரணங்களைக் கேட்டால் பெரிதாக எதுவும் இருக்காது. அப்படியான ஒரு சம்பவம்தான் இது. ‘‘கணவர்என்னை பப்ஜி விளையாட விடுவதில்லை.

எனக்கு விவாகரத்து வேணும்...’’ என்று புதிதாக திருமணமான இருபது வயது பெண் ஒருவர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்!இந்த வழக்கு இணையத்தில் கசிய, சில மணி நேரங்களில் வைரலாகிவிட்டது. இந்த நிகழ்வு பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்ததுதான் இதில்
ஹைலைட்.

லன்ச் லைக்ஸ்!

இன்ஸ்டா பக்கத்தில் ஃபிட்னஸ், ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை அள்ளித் தெளித்த ரகுல் ப்ரீத் சிங்கின் மனதில் ஒரு டன் மாற்றம் நிகழ்ந்திருக்கும் போல. இப்போது ஹெல்த் டிப்ஸும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பொண்ணு. இதுவரை டயட் பேக்கேஜில் வொயிட் ரைஸ் பக்கம் திரும்பாமல் இருந்தவர், இப்போது மதிய வேளைகளில் வெள்ளை சாதமும், நெய்யும் சேர்த்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.

இப்படிச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம். தான், சாப்பிடும் அழகைப் புகைப்படமாகப் பதிவிட்டு, நாலரை லட்சம் லைக்குகளையும் அள்ளி மகிழ்ந்திருக்கிறார்.

குங்குமம் டீம்