5 நடிகைகள்...தகவல்கள்!முல்லைப் பெண்!

*‘பேட்ட’ பொண்ணு மாளவிகா மோகனன் வசிப்பது மும்பை என்றாலும் அவரது பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பையனூரில்தான் இன்னமும் இருக்கிறது. ‘‘எப்ப பையனூர் போனாலும் அங்க முல்லைப்பூ வாசம் வீசும். அம்மாவுக்கு பிடிச்ச பூ அது. அதனாலேயே வீட்ல முல்லைப்பூ தோட்டம் போட்டிருந்தோம். தெனமும் பூ கட்டி தலையில் வச்சிப்பாங்க. வீட்ல இருக்கற பூஜை ரூமிலும் அந்த பூதான் இடம்பெறும்...’’ என முல்லை பர்ஃப்யூம் தெளிக்கிறார்
மாளவிகா.

காஜல் கார்ட்டூன்!

*ஹாலிவுட் பிரபலங்களுக்கு பிடித்தமான சாண்ட்விச்களோடு அவர்களை இணைத்து ஃபன் கார்ட்டூன்களாக வரைந்து வரும் நிறுவனம் ஒன்று நம் காஜல் அகர்வாலையும் வரைந்திருக்கிறது!காஜலுக்கு ப்ரியமான கிரில்டு சென்னமசாலா சாண்ட்விச்சின் மீது (அதில் எக்ஸ்ட்ராவாக சீஸ் ப்ளஸ் நிறையவே லெட்யூஸ் இலைகளோடு) காஜல் அட்டகாச புன்னகையுடன் கேஷுவலாக அமர்ந்திருப்பது போல அந்த கார்ட்டூனை வரைந்து அனுப்பி
யிருக்கிறது!இப்போது காஜல் வீட்டு ஹாலை அலங்கரிப்பது அந்த கார்ட்டூன்தான்.

மார்ஷியல் லிங்குஸ்டிக்!

*டோலிவுட்டில் மகேஷ்பாபுவுடன் ‘மஹரிஷி’, பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் ‘ஹவுஸ்ஃபுல் 4’ என டாப் ஹீரோக்களின் படங்களில் மின்னுகிறார் ‘முகமூடி’ ஹீரோயின் பூஜா ஹெக்டே.

இந்திப் படத்தில் ஆக்‌ஷன் போர்ஷன் இருப்பதால் அதற்காக பொண்ணு கராத்தேயுடன்,
குங்ஃபூவையும் கலந்துகட்டி‘ஆக்‌ஷன் கேர்ள்’ ஆகி மாறி வருகிறார்!
மார்ஷியல் ஆர்ட்ஸில் மட்டுமல்ல, துளு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, தெலுங்கு என பல மொழிகளை சரளமாகப் பேசுவதிலும் பூஜா செம கில்லாடி!

தொடையில் பதிபக்தி!

*எதையாவது ‘காட்டி’ பரபரப்பை ஏற்படுத்துவதில் ராதிகா ஆப்தேவை மிஞ்ச ஆளில்லை. சமீபத்தில் மும்பையில் நடந்த காஸ்மோபாலிட்டன் பியூட்டி அவார்ட்ஸ் ஃபங்ஷனில் பங்கேற்ற அத்தனை பேரின் கண்களும் ஆப்தேவின் பக்கம்தான் திரும்பியிருக்கின்றன.

பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ரா வடிவமைத்த காஸ்ட்யூம் அது என்றாலும் கூட்டத்தினர் கண்கள் மொய்க்க அதுமட்டுமே காரணமல்ல. ராதிகா ஆப்தேவின் இடது தொடையில் தெரிந்த மச்சம்தான் காரணம்! ஆனால், அது மச்சம் இல்லையாம். தொடையில் ஆங்கில எழுத்தான ‘பி’ என்ற எழுத்தை (கணவர் பெனடிக்ட் பெயரின் முதலெழுத்தாம்) டாட்டூவாக வரைந்திருக்கிறார்!

அம்மா... மஞ்சிமா!

*‘‘உங்க முகம் ஜெயலலிதா கேரக்டர்ல நடிக்க செட் ஆகுமே?’’ என மஞ்சிமா மோகனிடம் கேட்டால், வெட்கத்தில் கன்னம் சிவக்கிறார். ‘‘பலரும் இதை எங்கிட்ட சொல்லியிருக்காங்க. என்னை அறிமுகப்படுத்தின கௌதம் மேனன் சார் கூட ஒரு வெப் சீரீஸில் ஜெயலலிதா மேம் ஆக நடிக்க கேட்டிருந்தார். ஆனா, சில சூழல்களால் அது அமையல. எதிர்காலத்தில் அப்படி வாய்ப்பு அமையும்போது நிச்சயம் நடிப்பேன்..!’’l

மச்சான்