புடவைகளின் காதலி



அறிமுகமான முதல் படமே ஹேப்பி ரிசல்ட் என்பதில் ட்ரிப்பிள் குஷியில் இருக்கிறார் ஸ்மிருதி வெங்கட். ‘தடம்’ படத்தில் ஆனந்தியாக அருண்குமாரின் அன்பை அள்ளியவர். ‘‘சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஃபேஷன் தொடர்பான ஒரு வேலைல இருந்தேன். அப்புறம் ஒரு டிவி சேனல்ல காம்பியர் ஆனேன். இதெல்லாம் சேர்ந்து கேமரா முன்னாடி நிற்கிற என் ஆசையை அதிகப்படுத்தினது!

என் முதல் படமே கோலிவுட்ல தடம் பதிச்சிருக்கு. அந்தப் படத்துல டப்பிங்கும் நானே பேசினேன்!’’ புன்னகைக்கும் ஸ்மிருதி, ஒரு saree lover. விதவிதமான சேலைகளை வாங்கிக் குவித்திருக்கிறார்!

மை.பா