வேட்டை!



பியானோ மாஸ்டராக 13 வயதில் புகழ் பெற்று சாதனை புரிந்த சிறுவன் லிதியனைப் பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா குரு, சென்னை; ஆத்மநாதன், ஆற்காடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஆர். சண்முகராஜ், திருவொற்றியூர்; முரளி, நங்கநல்லூர்; இலக்சித், மடிப்பாக்கம்; நஞ்சையன், பொள்ளாச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; ஆனி அஞ்சலின், சென்னை.

இந்திய சதுரங்கத்தின் இளைய மகனாக உருவெடுத்துள்ள இனியன் வந்த பிறகு இனியென்ன கவலை. இனி உலகமெங்கும் ‘சதுரங்க ராஜா’வின் வேட்டைதான்.
- பிரேமா குரு, சென்னை; தெய்வசிகாமணி, வேளச்சேரி; ரவிக்குமார், பொள்ளாச்சி; இலக்சித், மடிப்பாக்கம்.
புதிய வாக்காளர்களின் ஓட்டு பல கட்சிகளுக்கு வேட்டாக அமைவது உறுதி.

- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பிரேமா குரு, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; உஷா முத்துராமன், திருநகர்; ஆர்.ஜெ.சி, சென்னை; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராமின் சிறப்புகளை ‘க்ளிக்’ செய்த கட்டுரை மனதில் பளிச்சென்று பதிந்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா குரு, சென்னை; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்; ஆர்.ஜெ.சி, சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கும் அவலத்தை காரண காரியங்களோடு விளக்கும் கட்டுரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கைவல்லியம், மானகிரி; சிவக்குமார், சீர்காழி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜெர்லின், ஆலந்தூர்; சாய்கவின், பொள்ளாச்சி; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

‘விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்னை...’யைப் படிக்கும்போதே இதயம் பதறுகிறது. சிந்தித்து தண்ணீரைப் பயன்படுத்துவோம்.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; கைவல்லியம், மானகிரி; மனோகர், சென்னை; சண்முகம், திருநெல்வேலி.

சூப்பர் ஸ்டாரை வாழ்த்தி சீத்தலைப் பாட்டனார் பாடிய கானா அவரது ரசிகர்கள் நெஞ்சில் இனிக்குது தேனா.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘மெட்ராஸ் பிஞ்சராபோல் (பசுமடம்)’ வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பதை ‘குங்குமம்’ இதழ் வாயிலாகத்தான் அறிந்தோம்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி; மயிலை.கோபி, அசோக் நகர்.

ரீடர்ஸ் வாய்ஸ்