இந்த ஆண்டுக்கான வைரலை ஸிவா தொடங்கிவிட்டார்!



தகவல் பெட்டகன்

வந்தாச்சு ஐபிஎல். போதாதா? கூடவே வைரலாக தயாராகி விட்டார் ஸிவா!

ஸிவா..? ஆம்; தோனியின் அருமை மகள். ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும் என்பது விதி!

தோனிக்கு எவ்வளவு ஃபாலோயர்ஸ் இருக்கிறார்களோ அவ்வளவு பேர் ஸிவாவுக்கும் இருக்கிறார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் அப்படித்தான் ஸிவா செய்ததெல்லாம் வீடியோவாகி சமூக வலைத்தளங்களை அதிர வைத்தது.

அந்த டிரெண்ட், இதோ இந்த வருடமும் தொடங்கிவிட்டது!  

யெஸ். தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோதான் சென்ற வாரம் முழுக்க ஹாட்.‘எப்படி இருக்கீங்க..?’ என தோனி ஆறு மொழிகளில் கேட்க... அதற்கு தகுந்தபடி ஸிவாவும் அந்தந்த மொழிகளில் பதில் அளிக்கிறார்!

தமிழில் ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்டதும் ‘நல்லா இருக்கேன்’ என மழலையில் கண்சிமிட்டுகிறார். அடுத்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி...

எல்லா மொழிகளிலும் ஒரே கேள்வி. அந்தந்த மொழிகளிலேயே பதில்!

இறுதியாக தோனி ‘இன்ஷா அல்லாஹ்’ சொல்ல... அதற்கு ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதிலளிக்க... வீடியோ முற்றும்.இந்த முதல் வீடியோவுடன் இந்த ஆண்டுக்கான ஸிவா வைரல் கொண்டாட்டம் இனிதே தொடங்கியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!