தேர்தல் 2019-199 புதிய சின்னங்கள்... 2,293 கட்சிகள்!



மக்களவைத் தேர்தலை ஒட்டி மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைத் தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறியதும், பெரியதுமாக 2,293 கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்திருக்கின்றன!
இவற்றில் 7 கட்சிகள் தேசியக் கட்சிகளாகவும், 59 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன. மற்றவை அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே இருக்கின்றன. இதில் 149 கட்சிகள் கடந்த 3 மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்டவை!  

தேர்தல் கமி‌ஷனின் அங்கீகாரம் பெறாத இக்கட்சிகள் பொதுச் சின்னங்களில் போட்டியிடுகின்றன.இவர்களுக்காகவே ஹெலிகாப்டர், ரொட்டி சுடும் இயந்திரம், சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் மவுஸ், வாட்டர் டேங்க் உட்பட 199 சின்னங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன!l

நெட்டிசன்