ரீடர்ஸ் வாய்ஸ்மாஸ்!

போல்ட், நட்ஸைப் பயன்படுத்தி நகைகள் செய்து அசத்தும் மும்பை சகோதரி கௌரி கிரிதிகர் பதாரேவின் முயற்சி ‘நச்’.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

‘விஸ்வாசம்’ பேட்டைகளைக் கலக்குமா அல்லது ‘பேட்ட’ ரசிகர்களின் விஸ்வாசத்தைப் பெறுமா என்பதற்கு பட்டிமன்றம் வைக்கும் நிலையில் இருந்தது உங்களின் கட்டுரை. அதிலும் அந்த குரூப் போட்டோ செம மாஸ்.
- சந்திரமதி, மடிப்பாக்கம்; ப.மூர்த்தி, பெங்களூரு; அ.யாழினி பர்வதம், சென்னை; அசோகன், அசோக் நகர்; நரசிம்மராஜ், மதுரை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; முரளிதரன், மதுரை; பிரேமா, சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

வீணையைக் கொண்டு மேடையைக் கலக்கி வரும் ராஜேஷ் வைத்யா கொஞ்சம் வித்தியாசமானவர்தான். அவரின் வீணை மட்டுமல்ல; நேர்காணலும் ‘செம ஸ்பீடு’.
- இலக்சித், மடிப்பாக்கம்; முரளிதரன், மதுரை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

‘நவீன இலக்கியத்துக்கு வித்திட்டதே திராவிட இலக்கியம்தான்’ என்று ஆணித்தரமாகக் கூறிய எழுத்தாளர் இமையத்தின் பேட்டி இதயத்தைத் தொட்டது.
- மனோகா, திருச்சி; க.நஞ்சையன், பொள்ளாச்சி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா பாபு, சென்னை.

ஏழைக் குழந்தைகளின் கால்களைக் கொஞ்சமேனும் பள்ளியை நோக்கி இழுப்பதற்கு காரணமான சத்துணவு மையங்களை மூட அனுமதிக்கவே கூடாது என்று பொட்டில் அடித்தது போல சொன்னது ‘மூடப்படும் சத்துணவு மையங்கள்’ கட்டுரை.
- பிரேமா பாபு, சென்னை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நடிப்பு, கட்சி, சின்னத்திரை, குடும்பம் என எல்லா துறைகளிலும் முத்திரை பதிக்கும் குஷ்புவின் அனுபவ வார்த்தைகள் அனைவருக்கும் பாடம்.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; மியாவ்சின், கே.கே.நகர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; அ.யாழினி பர்வதம், சென்னை.

எண்பது வயதான ஓவியர் மாருதியின் அறுபது ஆண்டுகால அனுபவத் தொகுப்பு நல்லதொரு ஆவணப்படம்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன், சென்னை; பப்பு, அசோக் நகர்.

காஸ்ட்யூம் டிசைனர் பிரவீன்குமாரின் பேட்டி, ‘பேட்ட’ ரசிகர்களுக்கு நல்ல ‘வேட்ட’.
- சண்முகராஜ், திருவொற்றியூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மயிலை.கோபி, அசோக் நகர்; வண்ணை கணேசன், சென்னை; பிரேமா, சென்னை; அ.யாழினி பர்வதம், சென்னை.