ஏரியா லிட்ரேச்சர்அவ தேனா?

கானா பாட்டு பாடி
வந்த மச்சான் நான்
காணாமதான்
போயிடமாட்டேன் நெஜமா
கண்ணுலே கண்டது
எல்லாம் நிஜமா?
உன் காதுலே ஒலிக்கும்
என் கானாவென்ன கனவா?

தாத்தா சொல்லி
தந்ததில்ல பாட்டு
பாடாமலிருக்க என்
வாயில் இல்ல பூட்டு
நேத்து வரை தெரியவில்லை
இதோட மவுசு
நான் பிடிச்ச mouse-விட
இதிலிருக்கு மனசு!

காதலிச்சா தாவணிப்
பொண்ணு தயங்குறா!
குனியுறா!
ஆனா
கட்டிவச்சா கன்னிப்
பொண்ணு மயக்குறா!
கவுத்துறா!
நேற்று வரை ரசித்ததில்ல
இந்த கானா
நாட்கணக்கா பசித்த
எனக்கு அவ தேனா?

கானா பாட்டு பாடி
வந்த மச்சான் நான்
காணாமதான்
போயிடமாட்டேன்
நெஜமா!

சீத்தலைப் பாட்டனார்