செல்ஃபி என்பது..!



பெயர் என்னவோ செல்ஃபிதான். ஆனால், இது self சம்பந்தப்பட்டது என்பதால் கவனம் தேவை! சரியான லைட்டிங்கும் கோணமும் அவசியம். அப்போதுதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எல்லா முகங்களும் ஒரு கோணத்தில் அழகுதான். அந்தக் கோணம் எது என கண்டறிந்து எடுப்பதே செல்ஃபியின் பால பாடம். இல்லையெனில் கோணமே கோணலாகி விடும்! - இப்படி யூத்களுக்கு டிப்ஸ் தருகிறார் ஸ்ருதி ஹாசன். வாங்க செல்ஃபி எடுக்கலாம்!

ஆக்ரோஷம் என்பது...

ஆக்ரோஷம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அதை எந்த இடத்தில், எப்போது, எதற்காக, ஏன் வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுதான் ஆக்ரோஷத்தையே முழுமை அடைய வைக்கும். முக்கியமாக முகத்திலும் கண்களிலும் கோபத்தை வெளிப்படுத்தும்போது உடலில் வியர்வை அதிகளவு சுரக்கும். எனவே, ஆக்ரோஷம் வடிந்தபிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்! - என டிப்ஸ் தருகிறார் ‘ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ படங்களின் நாயகி நிவேதா பெத்துராஜ்!

யோகா என்பது...

சோர்வு, டென்ஷன், துக்கம், சந்தோஷம் உள்ளிட்ட மனம் சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தையும் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி நாள்
தோறும் யோகா செய்வதுதான்! உள்ளத்தை மட்டுமல்ல, உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் யோகா மலர்ச்சியாக வைத்திருக்கும். எப்படிப்பட்ட சூழல்களையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்க துணையாக இருக்கும்! வயது ஆக ஆக இளமை ததும்பி வழியும்... - என யோகா செய்வதால் ஏற்படும் பலன்களை அடுக்குகிறார் இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி.

நீச்சல் என்பது...

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். ஜிம்முக்கு சென்றால் ஒவ்வொரு அங்கமும் வலுவாக ஒவ்வொரு பயிற்சி அளிக்கப்படும். ஆனால், சகல அங்கங்களும் ஒரே நேரத்தில் அதுவும் ஒரே பயிற்சியில் வலுவாக உதவுவது நீச்சல்தான்! உடலை மட்டுமல்ல... மனதையும் புத்துணர்ச்சியாக மாற்றும் ஆற்றல் ஸ்விமிங்குக்கு உண்டு! - என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ராவின் கஸினும்; பிசினஸ், ஃபைனான்ஸ் & எகனாமிக்சில் டிரிபுள் டிகிரி முடித்தவரும்; நடிகையுமான பரிணீதி சோப்ரா!

தொகுப்பு : காம்ஸ்பாப்பா