கட்டிடங்களை பாதுகாக்கும் நாய்ப்படை!கொலைகளையும் கொள்ளைகளையும், போதைப் பொருட்களையும் முகர்ந்து பார்த்து கண்டுபிடித்து சட்டப்படி குற்றம் சொல்லி குரைத்த போலீஸ் நாய்கள் விரைவில் அரசு கட்டடங்களின் பாதுகாவலர்களாக டூட்டி பார்க்கவிருக்கின்றன! முக்கியமான கட்டடங்களான ராஜ்பவன், முதல்வர் மாளிகை, பாபா அணுஆராய்ச்சி மையம், மாநில காவல்துறை தலைமையகம், மந்திராலயா உள்ளிட்டவற்றை இனி காவல்காக்கப் போவது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள்தான்.

“சந்தேகத்திற்குரிய பொருட்களைக் கண்டறியவும், தேவைப்பட்டால் ஒருவர் மீது தாக்குதல் நடத்தவும் நாய்ப்படைகளுக்கு பயிற்சியளித்து வருகிறோம். நாய்கள் தினசரி பல்வேறு இடங்களில் மாற்றப்பட்டு பணிநேரம் ஒதுக்கப்படும்...” என்கிறார் காவல்துறை அதிகாரியொருவர். இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வெய்லர் உள்ளிட்ட இன நாய்கள் இடம்பெற்றிருக்கும் என காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

- ரோனி