டேஸ்ட்!* ஹீரோயின்களின் கலர்ஃபுல் செய்திகள் கலக்கல் டேஸ்ட்!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
* கலாசார பாரம்பரியமிக்க அடையாளங்கள் அழிவது அதிர்ச்சி தந்தன.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி.
* பொதி கழுதை ஒப்பீட்டுடன் பாஜகவை டைட்டாக கலாய்த்த நாஞ்சில் சம்பத்தின் பேட்டி சரவெடி அதிர்வேட்டு.

- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சைமன்தேவா, விநாயகபுரம்; நஞ்சையன், பொள்ளாச்சி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; முரளிதரன், மதுரை; லட்சுமி நாராயணன், வடலூர்; ராஜ்குமார், குன்னூர்.
* குறைந்த பொருள், நிறைந்த வாழ்க்கை என மினிமலிச வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான்.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
* உண்மை நிகழ்வின் புனைவு என வடசென்னை பட முன்னோட்டமே பல்ஸ் எகிறவைத்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; நடராஜன், திருமுல்லைவாயல்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முரளிதரன், மதுரை.
* பாலியல் தொழிலாளிகளுக்கான துர்கா பூஜை ஓவியம், நெகிழ்ச்சி கண்ணீர்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சத்தியநாராயணன், அயன்புரம்.
*‘96’ படத்தில் குறுஞ்சிரிப்பில் காதல்போதை ஏற்றிய கௌரி கிஷான் பேட்டி அமர்க்களம்.
- வெ.லட்சுமிநாராயணன்,
வடலூர்.
* நோபல்பரிசு பெற்ற முதல் ஈராக்கியப் பெண் நாடியா குறித்த அறிமுகம், ரோல்மாடல் கெத்து!
- அக்‌ஷயாமாறன், திருவண்ணாமலை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.
* ஆங்கிலேயர்கள் கட்டிய பாலங்களின் வரலாறு சொன்ன ‘தலபுராணம்’, தொடரில் தனி ரகம்.
- ராஜ்குமார், குன்னூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தேவா, கதிர்வேடு.
* தொழிற்சாலைக் கழிவுநீரையும் கல்வாழை சுத்திகரிக்கும் என்ற ‘ஹோம் அக்ரி’யின் தகவல் புதுசோ புதுசு!
- ஜானகி ரங்கநாதன், சென்னை.
* திருமணம் தாண்டிய உறவு தீர்ப்பை நேர்த்தியாக எளிமையாக விளக்கிய கட்டுரை அருமை.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்; முருகேசன், கங்களாஞ்சேரி.
* விளக்கு மனிதர் பிரசாத்தின் பல்லாண்டு விளக்கு கலெக்ஷன்ஸ் பிரகாசம்!
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு; லட்சுமி நாராயணன், வடலூர்; இனியா, கங்களாஞ்சேரி; மனோகா, திருச்சி; சத்தியநாராயணன், அயன்புரம்.
* இந்தியாவில் சூறாவளியாக சுழன்றடிக்கும் ‘மீ டூ’ விவகாரத்தின் தீர்வாக மனசாட்சியுடன் நடப்பது அவசியம் என இயல்பாகக் கூறிவிளக்கியது சூப்பர்.
- ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; இனியா,கங்களாஞ்சேரி.
 
- ரீடர்ஸ் வாய்ஸ்