வயது 45உற்றுப் பார்க்காமலேயே படத்தில் இருப்பவர் நடிகை மலைக்கா அரோரா என்று நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு வயது 30 ப்ளஸ் என்று அர்த்தம்! மணிரத்னத்தின் ‘உயிரே...’ படத்தில் ‘தைய... தைய... தையா... தையா...’ என ரயிலின் மேல் நின்று கழுத்துக்கு கீழிருக்கும் அனைத்து அவயவங்களையும் ரப்பர் போல் வளைத்து ஆடிய அம்மணிதான் இவர்! இந்தி நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு மணந்து கொண்ட இவர்,

2002ம் ஆண்டு தாயானார். மகன் அர்ஹானுக்கு இப்போது வயது 16. ஸ்வீட் சிக்ஸ்டீன். இந்நிலையில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றார். ஆக, இப்போது மலைக்கா அரோரா சிங்கிள்தான். இதைக் கொண்டாடும் விதமாகவும், பட வாய்ப்புகளை எதிர்பார்த்தும் சமீபத்தில் தனிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது க்ளிக்கியவை இவை! சிம்பு பார்வைக்கு இப்புகைப்படங்கள் சென்றால் விரைவில் மலைக்காவை தமிழ்ப் படங்களில் எதிர்பார்க்கலாம்!                   

- காம்ஸ் பாப்பா