பாலியல் தொழிலுக்கு ஹெல்ப்லைன்!பாலியல் வல்லுறவுக்கு, சீண்டல்களுக்கு ஆலோசனை தந்து குழந்தைகளை மீட்கும் ஹெல்ப்லைன் நம்பரை விபச்சார சேவை எண்ணாக விளம்பரப்படுத்தி சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது வக்கிர கூட்டம் ஒன்று. இந்திய அரசின் குழந்தைகளுக்கான உதவி எண்ணுக்கு திடீரென ‘செக்ஸ் தேவைகளுக்கு பெண்கள் கிடைக்குமா?’ என எக்கச்சக்க அழைப்புகள் வர மிரண்டுபோனது உதவி எண் குழு.

உடனே இதுபற்றி மேலதிகாரிகளிடம் தெரிவிக்க, புதிய எண்ணை விளம்பரப்படுத்தி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். இந்த அழைப்புகளுக்குக் காரணம் சில வக்கிரபுத்திக்காரர்கள் குழந்தைகளுக்கான உதவி தொலைபேசி எண்ணைப் பாலியல் தளங்களில் பதிவிட்டது தான். “பழைய எண்ணை இணையதளங்களிலிருந்து அகற்றும் வரை புதிய எண்ணைப் பயன்படுத்த இப்போது அறிவுறுத்தியுள்ளோம்...” என்கிறார் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினரான யஷ்வந்த் ஜெயின்.

- ரோனி