|  கவிதை வனம்
 
 
ரசனை
 நீராடி வந்த
 அவள் விழிகளை
 ரசிக்க
 இமைமுடிக் கற்றைகள்
 பற்றித் தொங்கின
 நீர்த்திவலைகள்.
 
 
 -  பா.ரமேஷ்
  குறுங்கவிதைகள்
 
 கொட்டிய மழையில்
 தேங்கிக் கிடக்கிறது
 நம் சந்திப்பின் முத்தங்கள்
 
 மழை மூட்டம் கண்டதும்
 மனதெங்கும்
 உன் நினைவுத்தட்டான்கள்
 
 சிலிர்க்கும் சாரலில்
 நனைதல் அற்புதம்
 கூந்தலைத் துவட்டு
 
 மழையைக் கொட்டி
 ஊரெல்லாம் கழுவி
 பூக்களை உதிர்த்து
 தரையெல்லாம்
 அலங்கரித்தாயிற்று
 உன்னைத்தான்
 காணவில்லை
 
 
 - சஷாங்கன் 
 
 |