பேரழகன்கள்!ரீடர்ஸ் வாய்ஸ்

டான்ஸில் ரசிகர்களை கிளாமராக கிறக்கும் சாயிஷா பேட்டி படித்து அவரின் படத்தை போனில் வால்பேப்பராகவும் வைக்க துடிக்குது எங்க மனசு.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; கார்த்திகேயன், சென்னை.

மனைவியை வற்புறுத்தாமல் கருத்தடை முறைகளை, தானே கடைப்பிடிக்கும் ஆண்கள் உண்மையிலேயே பேரழகன்கள்தான்.
- சந்திரமதி, மடிப்பாக்கம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி.

கழிவறை பிரச்னைக்கு ஆசிரியர் முருகேசன் போல சுயமாக தீர்வு கண்டறிபவர்கள் தமிழகத்தின் நம்பிக்கை ஆன்மாக்கள்.
- வரலக்ஷ்மி முத்துசாமி, கொளத்தூர்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கைவல்லியம், மானகிரி; பூதலிங்கம், நாகர்கோவில்; முருகேசன்,  கங்களாஞ்சேரி; ராஜ்குமார், குன்னூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு;ஜெசி, சென்னை; தேவா, கதிர்வேடு.

எம்ஐடியின் ஆலோசகராக கெத்து காட்டும் தல அஜித்தின் ரெயின்போ பரிமாணங்கள் வியக்க வைக்கின்றன.
- மயிலைகோபி, அசோக்நகர்; மனோகர், கோவை; சத்தியநாராயணன், அயன்புரம்; நடராஜன், திருமுல்லைவாயில்; சைமன்தேவா, விநாயகபுரம்;  பூதலிங்கம், நாகர்கோவில்; லக்‌ஷித், மடிப்பாக்கம்.

ஃப்ரீஸ்டைல் ஃபுட்பாலில் கின்னஸ் லெவலில் அசத்திய பிரதீப் ரமேஷ், அவரின் மாணவரான ராகுல்ராஜா இருவரின் சாதனைகளும் சூப்பர்ப்.
- மயிலைகோபி, அசோக்நகர்; மியாவ்சின், கே.கே.நகர்.

மேற்கத்திய லாபவெறி தத்துவத்தில் உருவாகியுள்ள வனக்கொள்கை இந்தியாவின் மீதியுள்ள வளத்தையும் அழித்துவிடாமல் காப்பது நமது கடமை.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; ராஜ்குமார், குன்னூர்; ஜெயச்சந்திரபாபு, சென்னை.

ஆங்கிலேயர்கள் அந்நாளி லேயே தொடங்கி இன்றுவரை இயங்கிவரும் எழும்பூர் கண் மருத்துவமனையின்
வரலாறு பிரமிப்பு.
- பி.ஜெரிக், சென்னை; சத்தியநாராயணன், அயன்புரம்; லக்‌ஷித், மடிப்பாக்கம்.

நியூஜென் பாடலாசிரியர்களின் ஜாலி கேங்அவுட் இளமையும் புதுமையுமாக செம கலகலப்பு.
- ஆர்.ஜெசி, மடிப்பாக்கம்; மனோகர், திருச்சி; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; முரகேசன், கங்களாஞ்சேரி; சித்ரா, திருவாரூர்.

2 ஆயிரம் ஆண்டு வரலாற்றை நாணய சேகரிப்பு மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சுரேஷ் அரிய மனிதர்.
- சந்தியா, கே.கே.நகர்; தேவா, கதிர்வேடு; ராமகண்ணன், திருநெல்வேலி.

பிரியா வாரியர் தொடங்கி ராகுல், ஒபாமா, டோனி அபோட் என நீளும் நியூஸ் வியூஸின் வரலாற்று அணிவகுப்பு, சுவாரசிய சடுகுடு.
- மனோகர், கோவை; ஜெயச்சந்திரபாபு, சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்.