மாற்று மதமா? உடனே வெளியேறு!மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எதற்காகத் தெரியுமா? அவர்கள் முஸ்லீம் மதத்தைச்  சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக! மேற்கு வங்காளத்தின் தெற்குப்பகுதியில் பிளாட்டில் தங்கி மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வந்த  அஃப்தாப் ஆலம், மோஜ்தபா ஹசன், நசீர் ஷேக், ஷாகத் ஷேக் ஆகிய நால்வரும் விரைவில் தங்கியுள்ள இடத்தை விட்டு வெளியேற  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் ‘சங்கதி அபிஜன்’ என்னும் தன்னார்வ அமைப்பை அணுக, அவர்கள் பிளாட்வாசிகள் மற்றும் கவுன்சிலரிடம் பேசவிருக்கிறார்கள்.
‘‘வீட்டு ஓனரிடம் எந்த பிரச்னையுமில்லை. ஆனால், சக பிளாட்வாசிகள் எங்களை காலி செய்ய அவருக்கு கொடுத்த நிர்ப்பந்தம் அவரை அப்படி பேச  வைத்துள்ளது. நாங்கள் சார்ந்த மதத்துக்காக வீடு தராமல் ஒதுக்குவது வேதனையாக உள்ளது...’’ என்கிறார் மருத்துவரான ஆலம். அரசியல் கட்சிகளின்  பிரசாரத்தால் இனவாத நோய் இந்தியர்களின் இதயங்களையும் தாக்கிவிட்டதோ?
                        

- ரோனி