கடைக்குட்டி சிங்கம்



அர்த்தனா பினு

‘‘பூர்வீகம் கேரளா. திருவனந்தபுரத்துல ஸ்கூல் படிப்பு. ஜர்னலிசம் & மாஸ் கம்யூனிகேஷன்ல டிகிரி முடிச்சிருக்கேன்.

சின்ன வயசுல இருந்தே டிராமா, கல்ச்சுரல்ஸ்ல கலக்குவேன். மலையாள சேனல்ல காம்பியரிங் செய்திருக்கேன். அதைப் பார்த்துட்டு ‘முதுஹவு’  படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது.இந்தப் படத்தைப் பார்த்துட்டு தெலுங்குல சான்ஸ் கிடைச்சது. ‘சீதம்மா அந்தலு ராமையா சிட்ராலு’ல நடிச்சேன்.  தமிழ்ல ‘தொண்டன்’ல அறிமுகமானேன். பிறகு ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ல கமிட் ஆனேன். இதுக்குப் பிறகு நடிச்ச ‘செம’ முதல்ல ரிலீஸ் ஆகிடுச்சு.  ‘கடைக்குட்டி சிங்கம்’ பரவலா என்னைக் கொண்டுபோய் சேர்த்திருக்கு. ஐ’ம் ஹேப்பி...’’ மலர்கிறார் அர்த்தனா பினு!